ஃபார்முலா ஒன் கார் பந்தய அமைப்பு விற்பனைக்கு...!!

By Ravichandran

ஃபார்முலா ஒன் மோட்டார் பந்தய அமைப்பின் உரிமைகள் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.

உலகின் முதல் தர கார் பந்தய தொடராக ஃபார்முலா ஒன் போட்டி விளங்குகிறது. இந்தநிலையில், ஃபார்முலா ஒன் இந்த ஆண்டு முடிவடைவதற்கு முன்பாகவே விற்பனை செய்யப்படலாம் என அதன் உரிமையாளர்களில் ஒருவரான பெர்னி எக்லஸ்டோன் கூறினார்.

Formula One

இந்த தகவலை ஆஸ்த்ரியாவின் கிட்ஸ்ப்யூஹல் என்ற இடத்தில் நடந்த கேம்ப் பெக்கென்பர் சர்வதேச மாநாட்டில் அவர் அறிவித்தார். தங்களது பங்குதாரர்கள் அவர்களின் பங்குகளை பகுதியாகவோ அல்லது மொத்தமாகவோ விற்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளதாக எக்லஸ்டோன் கூறினார்.

தற்போதைய நிலையில், ஃபார்முலா ஒன் உரிமைகளை வாங்குவதில் மூன்று நிறுவனங்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களில் ஒருவரேனும் இதனை விரைவில் வாங்குவதில் முனைப்புடன் உள்ளதாக எக்லஸ்டோன் தெரிவித்தார்.

Formula one game

ஃபார்முலா ஒன் இந்த ஆண்டே விற்கப்பட உள்ள நிலை இருந்தாலும், அதனை வாங்கும் ஆர்வத்தில் உள்ள நிறுவனங்கள் எவை எவை என எக்லஸ்டோன் தெரிவிக்கவில்லை.

தற்போதைய நிலைவில், ஃபார்முலா ஒன் உரிமைக்கான பங்குகளில், சிவிசி கேப்பிடல் பார்ட்னர்ஸ் 35.5 சதவிகித பங்குகளையும், பெர்னி எக்லஸ்டோன் 5.3 சதவிகித பங்குகளையும் கொண்டுள்ளனர். இதர பங்குதாரரகளாக பிளாக்ராக், வாட்டல் ஆண்ட் ரீட் மற்றும் நார்க்ஸ் பேங்க் உள்ளனர்.

ஜூன் மாதத்தில் வெளியான சில தகவல்களின் படி, ஆர்எஸ்ஈ வென்சர்ஸ் மற்றும் கத்தார் ஸ்போர்ட்ஸ் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் இணைந்து சிவிசி கேப்பிடல் பார்ட்னர்ஸ்-ஸின் 35.5 சதவிகித பங்குகளை, 7 முதல் 8 பில்லியன் டாலர்களுக்கு வாங்க உள்ளதாக தெரிகிறது.

முன்னதாக, ஃபார்முலா ஒன் கார் பந்தய தொடருக்கான 63 சதவிகித பங்குகளின் உரிமைகளை சிவிசி கேப்பிடல் பார்ட்னர்ஸ் கொண்டிருந்தது. 2012-ஆம் ஆண்டில் அதன் 63 சதவிகித பங்குகளில், 27.5 சதவிகித விற்பனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
===========

Most Read Articles
English summary
Yes, you heard it right-the pinnacle of motor racing, Formula One could be sold this year, says F1 supremo Bernie Ecclestone, via a telephone interview during Camp Beckenbauer Global Summit in Kitzbuehel, Austria.
Story first published: Sunday, October 11, 2015, 11:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X