எலக்ட்ரிக் கார்களுக்கான சூப்பர் பேட்டரி: கேம்பிரிட்ஜ் பல்கலை பொறியாளர்கள் கண்டுபிடிப்பு

Written By:

எலக்ட்ரிக் கார்களுக்கான நவீன வகை பேட்டரியை கேம்பிரிட்ஜ் பல்கலைகழக பொறியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இதனை சூப்பர் பேட்டரி என்று அழைக்கின்றனர்.

ஆட்டோமொபைல் உலகம் தொடர் மாற்றங்களை சந்தித்து வருகின்றது. இதில், மாற்று எரி சக்தி மற்றும் அவற்றை உபயோகபடுத்துவதற்கான வழிகளை கண்டறிவது மிக முக்கியமானதாக உள்ளது.

Super Battery
 

சில ஆண்டுகளுக்கு முன்பு லித்தியம் அயான் பேட்டரிகளின் கண்டுபிடிப்பு மிக பெரிய விஷயமாக இருந்தது. இப்போது, அதையும் மிஞ்சும் வகையில், சூப்பர் பேட்டரிகள் வர உள்ளது.

சூப்பர் பேட்டரிகள் என்பது, லித்தியம் அயான் ஆக்ஸிஜன் பேட்டரிகளாகும். லித்தியம் அயான் ஆக்ஸிஜன் பேட்டரிகள், தற்போது உபயோகத்தில் உள்ள லித்தியம் இயான் பேட்டரிகளின் குறைபாடுகளை போக்கும் வகையில் உள்ளதால், அதற்கு மாற்றாக அமைய உள்ளது.

லித்தியம் இயான் ஆக்ஸிஜன் பேட்டரிகளில், திறனை தேக்கி வைத்து கொள்ளும் ஆற்றல் அதிகமாக இருக்கும். இதனால், லித்தியம்அயான் பேட்டரிகள் தேக்கி வைத்து கொள்ளும் திறனை காட்டிலும், சூப்பர் பேட்டரிகள் 10 மடங்கு அதிக மின் சக்தியை தேக்கி வைத்து கொள்ளும்.

இதனால், வாகனங்களுக்கு கூடுதல் ரேஞ்ச் கிடைக்கும். மேலும், சூப்பர் பேட்டரிகள் 93 சதவிகித கூடுதல் செயல்திறன் கொண்டுள்ளது.

லித்தியம் அயான் ஆக்ஸிஜன் பேட்டரிகளுக்கு மேலும் சில சிறப்புகள் உள்ளன. சூப்பர் பேட்டரிகள், லித்தியம் இயான் பேட்டரிகளை காட்டிலும் 5 மடங்கு எடை குறைவாக உள்ளது. மேலும், சூப்பர் பேட்டரிகளை தயாரிக்கும் செலவும் 5 மடங்கு குறைவாக உள்ளது.

இதனால், எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதும், அவற்றை பராமரிக்கும் செலவும் மேலும் குறைய வாய்ப்புகள் உள்ளது. இனி வரும் காலங்களில், அதிக அளவிலான மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை உபயோகிக்க உள்ளதால், சூப்பர் பேட்டரிகளின் மதிப்பு கூடுகின்கிறது.

சூப்பர் பேட்டரிகளை கண்டுபிடித்த பெருமை, கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தை சேர்ந்த கிளேர் கிரே தலைமையிலான குழுவையே சேரும்.

ஆனால், இவ்வளவு மகத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தியும், இதில் ஒரு குறைபாடு உள்ளது. இந்த சூப்பர் பேட்டரிகள் நிஜ வாழ்வில், அன்றாட உபயோகத்திற்கு வர குறைந்தது 10 ஆண்டுகளுக்கு மேலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Future Electric Cars Could Be Powered By 'Super Batteries'. The Super Battery is a Lithium Ion Oxygen battery. The Lithium Ion Oxygen battery is five times lighter than Lithium Ion battery, and five times less cheaper to develop as well.
Story first published: Monday, November 9, 2015, 9:58 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark