ஆட்டோபான் சாலையில் டிரைவரில்லா கார்கள் சோதனைக்களம் அமைக்கும் ஜெர்மனி அரசு!

By Saravana

புகழ்பெற்ற ஜெர்மனியின் ஆட்டோபான் சாலையில் டிரைவரில்லாமல் இயங்கும் கார்களை சோதனை நடத்துவதற்கான தகவல் தொடர்பு கட்டமைப்பை உருவாக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஆட்டோபான் விரைவு சாலையில், பவேரியா பகுதியின் ஊடாக செல்லும் ஆட்டோபான் ஏ9 சாலையின் குறிப்பிட்ட தூரத்தை கார்களுக்கு இடையில் சிறப்பான தகவல் தொடர்பு வசதியை பெறும் வகையில், மின்னணு மயமாக்கவும் ஜெர்மனி அரசு திட்டமிட்டுள்ளது.

Autobhan

இதன்மூலம், டிரைவரில்லாமல் இயங்கும் கார்களை இந்த அதிவிரைவு சாலையில் நேரடியாக சோதனை நடத்துவதற்கு எளிதான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், உலக அளவில் வாகன தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஜெர்மனி சொந்தமாக டிரைவரில்லா கார் தொழில்நுட்பத்தை உருவாக்கவும் திட்டமிட்டிருக்கிறது.

கூகுள் டிரைவரில்லா கார் தொழில்நுட்பம் மற்றும் இதர வெளிநாட்டு தொழில்நுட்ப உதவிகளை ஜெர்மனி நிறுவனங்கள் நம்பியிருக்கக்கூடாது என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் ஆட்டோபான் ஏ9 சாலையின் குறிப்பிட்டத் தூரத்தை டிரைவரில்லா கார் சோதனைக்களமாக மாற்றப்படும் என்றும், இதற்காக சிறப்பான தகவல் தொடர்பு வசதிகளுடன் மின்னணு மயமாக்கப்படும் என்றும் ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
The German government is planning to convert part of the A9 Autobahn in Bavaria into a test-field for advanced car technology. The project is key to ensuring the country’s ‘digital sovereignty,’ according to its transport minister.
Story first published: Wednesday, January 28, 2015, 11:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X