டாடா நானோ காருக்கு ரூ.60,000 வரை சேமிப்புச் சலுகைகள்!

Written By:

புத்தாண்டை முன்னிட்டு டாடா நானோ காருக்கு ரூ.60,000 வரை சேமிப்புச் சலுகைகளை டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது.

நானோ கார் விற்பனையை அதிகரிக்கும் விதத்தில், தொடர்ந்து சேமிப்புச் சலுகைகளை டாடா மோட்டார்ஸ் வழங்கி வருகிறது. இந்த நிலையில், ஜனவரி 1 முதல் 31ந் தேதி வரை முன்பதிவு செய்பவர்களுக்கு சிறப்பு சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Tata Nano
 

டாடா நானோ ட்விஸ்ட் மற்றும் நானோ இ-மேக்ஸ் மாடல்களுக்கு ரூ.41,000 வரையிலும், சாதாரண மாடலுக்கு ரூ.60,000 வரையிலும் சேமிக்கும் வாய்ப்பை தற்போது வாடிக்கையாளர்கள் பெறலாம்.

இந்த சேமிப்புச் சலுகையில் எக்ஸ்சேஞ்ச் போனஸ், லாயல்டி போனஸ், விலையில் தள்ளுபடி சலுகை போன்றவை அடங்கும். இந்த சிறப்பு சேமிப்புச் சலுகை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விபரங்களுக்கு அருகிலுள்ள டாடா மோட்டார்ஸ் டீலரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

English summary
Tata Motors is offering up to INR 60,000 benefits on its entry lever small car Nano. Total benefits are inclusive of cash discount+ exchange bonus+ loyalty/welcome bonus. Contact your nearest dealer for more details. 
Story first published: Thursday, January 22, 2015, 17:38 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark