அக்.21ல் விற்பனைக்கு வருகிறது புதிய செவர்லே ட்ரெயில்பிளேசர்... ஆன்லைனில் முன்பதிவு!

Written By:

செவர்லே ட்ரெய்ல்பிளேஸர் எஸ்யூவியின் முன்பதிவு இன்று முதல் அமேசான் வியாபார தளத்தில் துவங்குகிறது. இதைத்தொடர்ந்து, வரும் 21ந் தேதி முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

அதேநேரத்தில், அமேசான் இணையதளத்தில் ட்ரெய்ல்பிளேஸர் காரை புக்கிங் செய்யும் வசதி அக்டோபர் 26-ஆம் தேதியுடன் நிறைவு அடைகிறது. அதன்பிறகு, டீலர்கள் மூலம் வழக்கம்போல் விற்பனை செய்யப்படும்.

அமேசான் இணையதளத்தில், ட்ரெய்ல்பிளேஸர் எஸயூவியின் குறிப்புகள் வெளியாவது குறித்து ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்தின் எம் டி அர்விந்த் சக்சேனா பெருமிதத்தை வெளிபடுத்தினார். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் பொருட்களை வாங்குவதற்கு முன், இணையதளங்ககளில் சென்று பார்த்த பின்னரே வாங்குகின்றனர். இது வாடிக்கையாளர்களுக்கு எளிதான அனுபவமாக உள்ளதால் இந்த முறையை கையாளுவதாக அர்விந்த் தெரிவித்தார்.

ஆன்லைன் புக்கிங்;

ஆன்லைன் புக்கிங்;

அமேசான் இணையதளம் மூலம் ட்ரெய்ல்பிளேஸர் காரை புக்கிங் செய்ய, திருப்பி பெறக்கூடிய தொகையான 25,000 ரூபாய் செலுத்த வேண்டும். காரின் விலையில் மீதம் செலுத்த வேண்டிய தொகை அருகிலுள்ள டீலரிடம் செலுத்த வேண்டும்.

அமேசான் மூலமும் டெலிவரி;

அமேசான் மூலமும் டெலிவரி;

அமேசான் மூலம் புக்கிங் செய்யப்படும் கார்களின் டெலிவரியானது, அமேசானின் வழக்கமான முறையில் வாடிக்கையாளர்களிடம் டெலிவரி செய்யப்படும். டெலிவரிக்கு பிந்தைய சோதனைகள் அனைத்தும் டீலர்களிடம் செய்யப்படும்.

ட்ரெய்ல்பிளேஸர் இஞ்ஜினின் விபரங்கள்;

ட்ரெய்ல்பிளேஸர் இஞ்ஜினின் விபரங்கள்;

(*) ட்ரெய்ல்பிளேஸர் காரின் 2.8 லிட்டர் இஞ்ஜின், 200 பி எஸ் மற்றும் உச்சகட்ட டார்க்காக 500 என் எம் டார்க்கினை வெளியிடும் திறன் கொண்டுள்ளது.

(*) கார் இயக்குவதன் மேம்படுத்தப்பட்ட அனுபவங்களை வழங்குவதற்கு, க்ரூஸ் கண்ட்ரோல் வசதி கொண்டுள்ளது.

(*) மேலும், இதன் சிறப்புமிக்க டச் ஸ்க்ரீன் வசதி கொண்ட மைலிங்க் எண்டெர்டெய்ன்மண்ட்டில் பொழுதுபோக்கிற்கான அனைத்து நவீன அம்சங்களும் உள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்;

பாதுகாப்பு அம்சங்கள்;

ட்ரெய்ல்பிளேஸரில் உள்ள ஈபிஎஸ் எனப்படும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் உள்ளது. இந்த ஈபிஎஸ் தொழில்நுட்பத்தில், சக்கரங்கள் மற்றும் ஸ்டியரிங் சக்கரத்தில் உள்ள சென்சார்கள் மூலம் சாலைகள் கண்கானிக்கப்பட்டு, கார் சறுக்காமல் இருக்க உதவுகிறது.

(*) எலக்ட்ரானிக் பிரேக்-ஃபோர்ஸ் டிஸ்ட்ரிப்யூஷன் சிஸ்டம்;

ட்ரெய்ல்பிளேஸரில் உள்ள ஈபீடி எனப்படும் எலக்ட்ரானிக் பிரேக்-ஃபோர்ஸ் டிஸ்ட்ரிப்யூஷன் சிஸ்டம், பிரேக் உபயோகிக்கும் பொழுது, ஒவ்வொரு சக்கரத்திற்கும் சரியான அளவில் பிரேக் ஆற்றலை வழங்கி, வாகனத்தின் சரியான பிரேக் கட்டுபாட்டிற்கு உதவுகிறது.

(*) ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்;

ட்ரெய்ல்பிளேஸரில் உள்ள ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், எமர்ஜென்சி மற்றும் திடீர் பிரேக் உபயோகங்களின் போது, வாகன ஓட்டிகளுக்கு மேம்பட்ட வாகன கட்டுபாட்டை வழங்குகிறது.

 ட்ரெய்ல்பிளேஸர் விலை;

ட்ரெய்ல்பிளேஸர் விலை;

ட்ரெய்ல்பிளேஸர் காரின் விலை 25 முதல் 30 லட்ச ரூபாய் விலையில் கிடைக்க உள்ளது. 25 முதல் 30 லட்ச ரூபாய் விலையில் விற்கப்படும் இந்த கார் தான், மின் வணிக சந்தையில், மூன்றாம் தரப்பு வியாபாரி மூலம் விற்கப்படும் மிகவும் விலை உயர்ந்த பொருளாகும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில், அமெரிக்க வாகன உற்பத்தியாளரான ஜெனரல் மோட்டர்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள 10 கார்களின் பட்டியலில் இந்த ட்ரெய்ல்பிளேஸர் முதலாவது காராக உள்ளது.

கடந்த ஆண்டில், மஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ரா நிறுவனமும் தங்களின் ஸ்கார்பியோ கார்களின் புக்கிங்களை ஸ்னாப்டீல் இணையதளம் மூலம் துவக்கியது குறிப்பிடத்தக்கது.

கார்களின் ஆன்லைன் விற்பனையில் ஏற்றம்;

கார்களின் ஆன்லைன் விற்பனையில் ஏற்றம்;

ஆன்லைன் மூலம் கார்கள் விற்கப்படும் போக்கு அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஃப்ராஸ்ட் அண்ட் சுல்லிவன் நிறுவனத்தின் ஆராய்ச்சியின் படி, 2020-ஆம் ஆண்டிற்குள் 60 முதல் 70 சதவிகித கார்களின் விற்பனையின் ஆன்லைன் மூலமே நடத்தப்படும் என தெரிகிறது.

உலக அளவில், மொத்தமாக வாங்கபடும் கார்களில், மூன்றில் ஒரு கார் ஆன்லைன் மூலமாக தகவல்கள் சேகரிக்கப்பட்டு வாங்கப்படுவதாக இருக்கும் என மெக்கென்ஸி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெனரல் மோட்டர்ஸ் கார்களின் விற்பனையில் வீழ்ச்சி;

ஜெனரல் மோட்டர்ஸ் கார்களின் விற்பனையில் வீழ்ச்சி;

இந்தியாவில் ஜெனரல் மோட்டர்ஸ் கார்களின் விற்பனை கடந்த இரண்டு ஆண்டுகளில் கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது. 2015-16 நிதிஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், 19,299 கார்கள் மட்டுமே விற்று 33.2 சதவிகித வீழ்ச்சி கண்டுள்ளது.

இதேபோல், 2014-15 நிதிஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகடத்தில், அதற்கு முந்தைய ஆண்டின் விற்பனையை காட்டிலும் 34 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

 
English summary

 General Motors India releases the specifications and other details of its new Trailblazer SUV Car. The Bookings for this premium sports utility vehicle Trailblazer has also commenced on Amazon.
Story first published: Thursday, October 15, 2015, 12:47 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark