எலைட் ஐ20 காரை போட்டுத் தாக்க 100 கோடியுடன் வரிந்துகட்டிய மாருதி!

By Saravana

இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரை பிரபலப்படுத்துவதற்காக ரூ.100 கோடியை மாருதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானை சேர்ந்த ஹகுஹோடோ மற்றும் இந்தியாவை சேர்ந்த பர்செப்ட் ஆகிய நிறுவனங்களின் ஹகுஹோடோ பர்செப்ட் என்ற கூட்டணி நிறுவனம் இந்த விளம்பர ஒப்பந்தத்தை மாருதியிடமிருந்து பெற்றுள்ளதாம். இந்த ஒப்பந்தம் 100 கோடி மதிப்புடையதாக தெரிவிக்கப்படுகிறது.

Maruti Car

புதிதாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஹேட்ச்பேக் காரை பிரபலப்படுத்தும் திட்டத்திற்காக இந்த ஒப்பந்தத்தை ஹகுஹோடோ பர்செப்ட் நிறுவனம் பெற்றிருக்கிறது.

மாருதி நிறுவனம் YRA என்ற குறியீட்டுப் பெயரில் சோதனை செய்து வரும் புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் கார்தான் அது என்று மீடியா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய கார் ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஹோண்டா ஜாஸ் ஆகிய கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட சுஸுகி ஐகே2 கான்செப்ட் மாடலின் அடிப்படையிலான புதிய கார்தான் இந்தியாவில் மாருதியின் புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காராக விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Hakuhodo Percept has received an advertising account from Maruti for a B-segment car that is scheduled to go on sales in May, according to The Economic Times. 
Story first published: Tuesday, March 10, 2015, 16:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X