கார்களின் பாதுகாப்பில் சிறு குறை இருந்தாலும் அமெரிக்காவில் சமரசம் கிடையாது!

Written By:

அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டிருக்கும் லாஃபெராரி கார்களை அந்நாட்டு தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு [NHTSA] திரும்ப அழைக்க உத்தரவிட்டிருக்கிறது.

பாதுகாப்பில் சிறு குறைகள் இருந்தாலும் அங்கு சமரசம் கிடையாது என்பதையே இந்த அறிவிப்பு காட்டுவதாக அமைந்திருக்கிறுத. அப்படி என்ன விஷயத்திற்காக அவர்கள் லாஃபெராரிக்கு ரீகால் அறிவிப்பு வெளியிட்டார்கள் என்பதை ஸ்லைடரில் காணலாம்.

முக்கிய சந்தை

முக்கிய சந்தை

உலக அளவில் ஃபெராரி கார்களின் முக்கிய சந்தையாக அமெரிக்கா விளங்குகிறது. எனவே, தனது லிமிடேட் எடிசன் மாடல்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையை அமெரிக்காவிற்காக ஃபெராரி ஒதுக்கிவிடும். அந்த வகையில், அந்த நிறுவனத்தின் சமீபத்திய ஹைப்பர் கார் மாடலான லாஃபெராரியையும் அதிக எண்ணிக்கையில் ஒதுக்கியது. மொத்தம் தயாரிக்கப்பட இருக்கும் 499 கார்களில் 120 லாஃபெராரிகள் அமெரிக்காவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்தநிலையில், லாஃபெராரி கார்களின் இருக்கும் பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்து தருவதற்காக திரும்ப அழைக்க NHTSA அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

முதல் காரணம்

முதல் காரணம்

அமெரிக்காவில் இதுவரை டெலிவிரி கொடுக்கப்பட்டிருக்கும் கார்களில் சில பிரச்னைகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது, இருக்கையின் ஹெட்ரெஸ்ட் விபத்துக்களின்போது மோதல் தாக்கத்தை போதிய அளவு உறிஞ்சும் தன்மை இல்லை என்றும், இதனால் பயணியின் தலைக்கு அதிக தாக்கம் ஏற்பட்டு காயமடைய வாய்ப்புகள் உள்ளதாகவும் NHTSA அமைப்பு கண்டறிந்துள்ளது.

இரண்டாவது காரணம்

இரண்டாவது காரணம்

லாஃபெராரி காரின் டயரில் காற்றழுத்தத்தை தெரிவிக்கும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டத்தில் பிரச்னை இருப்பதாகவும் NHTSA அமைப்பு தெரிவித்துள்ளது. கார் பஞ்சரானாலும் 80 கிமீ வேகத்துக்கு மிகாமல் காரை தொடர்ந்து செலுத்தலாம் என்று காண்பிக்கிறது. ஆனால், இது தவறான தகவல். இந்த தகவலை நம்பி காரை தொடர்ந்து செலுத்தினால் விபத்தில் சிக்கும் வாய்ப்பு ஏற்படும். எனவே, காரை தொடர்ந்து செலுத்துவதை தவிர்ப்பதற்கான எச்சரிக்கையை தரும் வகையில் சாஃப்ட்வேரில் மாற்றம் செய்ய உத்தரவிட்டிருக்கிறது.

மொத்த கார்கள்

மொத்த கார்கள்

லாஃபெராரி கார்களின் பயணிக்கான எல்32 இருக்கையின் ஹெட்ரெஸ்ட்டை மாற்றுவதற்கு உத்தரவிட்டிருக்கிறது. அதேபோன்று, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டத்தின் சாஃப்ட்வேரில் மாறுதல் செய்வது எளிதான விஷயமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு பிரச்னைகளுக்காகவும் மொத்தம் 85 கார்கள் திரும்ப அழைக்கப்பட உள்ளன.

இரண்டாவது ரீகால்

இரண்டாவது ரீகால்

கடந்த மார்ச் மாதம் லாஃபெராரி கார்களின் எரிபொருள் டேங்க்கை மாற்றித் தருவதற்காக ஃபெராரி திரும்ப அழைத்தது. ஆனால், அதனை ரீகால் என்று ஃபெராரி குறிப்பிடவில்லை.

 

English summary
Ferrari North America and the National Highway Traffic Safety Administration have issued two recalls for the LaFerrari to fix two different problems in the car. A total of 85 vehicles have been recalled for the two issues.
Story first published: Thursday, June 25, 2015, 10:08 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more