ஹோண்டா அமேஸ் மற்றும் பிரியோவின் புதிய வேரியண்ட்கள் அறிமுகம்!

Written By:

ஹோண்டா அமேஸ் மற்றும் பிரியோ கார்களில் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹோண்டா அமேஸ் காரில் VX(O) என்ற புதிய டாப் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட்டில் புதிய ஆடியோ - வீடியோ நேவிகேஷன் சிஸ்டம், வெள்ளை வண்ண இல்லுமினேஷன் லைட் கொண்ட ஸ்பீடோமீட்டர் சேர்க்கப்பட்டுள்ளன.

Honda Amaze
 

எலக்ட்ரிக் ஃபோல்டபிள் ரியர் வியூ கண்ணாடிகளின் டிசைன் மாற்றப்பட்டுள்ளது. மடக்கி விரிக்கும் வசதியுடன் கூடிய ரியர் வியூ கண்ணாடிகளும், பின்புற வைன்ட்ஷீல்டுக்கான டீஃபாகர் வசதியும் தற்போது அமேஸ் காரின் எஸ்எக்ஸ் வேரியண்ட்டிலும் இடம்பெற்றுள்ளன.

புதிய ஆடியோ வீடியோ நேவிகேஷன் சிஸ்டடத்தில் 15.7செமீ தொடுதிரை, வரைபட தகவல்கள், செயற்கைகோள் வழிகாட்டு வசதி, பொழுதுபோக்கு வசதிகள் உள்ளன. இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிவிடி, சிடி, புளூடூத், யுஎஸ்பி, ஆக்ஸ் போர்ட், ஐ-பாட், எம்பி3, எஃப்எம் உள்ளிட்ட நவீன வசதிகளை அளிக்கும்.

அமேஸ் காரின் விஎக்ஸ் வேரியண்ட்டுக்கு மேலாக இந்த புதிய விஎக்ஸ்(ஓ) வேரியண்ட் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அமேஸ் காரின் பெட்ரோல், டீசல் வேரியண்ட்டுகளில் இந்த வசதிகளை பெற முடியும்.

Honda Brio
 

இதேபோன்று, பிரியோவின் புதிய விஎக்ஸ் வேரியண்ட்டில் கருப்பு நிற இன்டிரியர் மற்றும் ஆடியோ வீடியோ நேவிகேஷன் சிஸ்டம் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய டிசைனிலான ரியர் வியூ கண்ணாடிகலும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய வேரியண்ட்டுகளின் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரம்

ஹோண்டா அமேஸ்

விஎக்ஸ்(ஓ) பெட்ரோல், மேனுவல்: ரூ.7.32,000

விஎக்ஸ்(ஓ) டீசல், மேனுவல்: ரூ.8,20,500

ஹோண்டா பிரியோ

விஎக்ஸ் பிஎல் பெட்ரோல், மேனுவல்: ரூ.5,99,000

விஎக்ஸ் பெட்ரோல் ஆட்டோமேட்டிக்: ரூ.6,78,400

English summary
Honda Cars India Ltd. (HCIL), leading manufacturer of premium cars in India, today introduced the new enriched range of Honda Amaze and Honda Brio. The Amaze comes with a new VX(O) grade featuring the Audio-Video Navigation. The new grade will be positioned above the existing VX grade in Manual Transmission in both petrol and diesel. The Brio range has also been expanded by introducing a new VX grade with striking Black Interiors and Audio-Video Navigation. 
Story first published: Tuesday, January 13, 2015, 12:58 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark