ஹோண்டா பிஆர்வி, புதிய அக்கார்டு கார்கள் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

Written By:

ஹோண்டா பிஆர்வி காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் புதிய அக்கார்டு பிரிமியம் செடான் கார்கள், வரும் பிப்ரவரியில் நடைபெற இருக்கும் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்தியாவில் விரிவடையும் வாகன சந்தையின் அங்கமாக விளங்கி, அதன் பயன்களை அடையும் நோக்கில் ஏராளமான இந்திய கார் நிறுவனங்களும், வெளிநாட்டு கார் நிறுவனங்களும், பல்வேறு கார்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கின்றனர்.

இந்தியாவில் அறிமுகம் செய்யபட உள்ள பிஆர்வி மற்றும் புதிய அக்கார்ட் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்;

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்;

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ, 2016 ஃபிப்ரவரியில் நடத்தபடுகிறது. இந்த எக்ஸ்போவின் ஏராளமான நிறுவனங்களின் 4 சக்கர வாகனங்கள், 2 சக்கர வாகனங்கள் காட்சிபடுத்தபட உள்ளது.

இந்த எக்ஸ்போவின் போது தான், ஹோண்டா நிறுவனம் தங்களின் பிஆர்வி காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் புதிய அக்கார்ட் பிரிமியம் செடான்களை மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இடைநிறுத்தபட்ட அக்கார்ட் செடான் விற்பனை;

இடைநிறுத்தபட்ட அக்கார்ட் செடான் விற்பனை;

அக்கார்ட் செடான் குறைந்த விற்பனை எதிர்நோக்கி வந்த காரணத்தால், அதன் விற்பனை இந்தியாவில் நிறுத்தபட்டிருந்தது.

முன்னதாக, இந்த பிரிமியம் செடான் பெட்ரோல் அல்லது தேர்வு முறையிலான ஹைபரிட் இஞ்ஜினுடன் இந்தியாவில் விற்கபட்டு வந்தது.

தற்போது, இதன் விறபனை மீண்டும் துவங்க கூடிய நிலையில், புதிய அக்கார்ட் பிரிமியம் செடான், பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் இஞ்ஜின்களுடன் விற்கபட உள்ளதாக தெரிகின்றது.

விற்கபட உள்ள விதம்;

விற்கபட உள்ள விதம்;

ஹோண்டாவின் புதிய அக்கார்ட், இந்திய வாடிக்கையாளர்களுக்கு சிபியூ அல்லது கம்ப்ளீட்லி பில்ட் யூனிட் எனப்படும் முழுவதுமாக கட்டிமுடிக்கபட்ட வடிவிலேயே விற்க பட உள்ளதாக தெரிகிறது.

போட்டி கார்கள்;

போட்டி கார்கள்;

புதிய அக்கார்ட் செடான் காருக்கு, டொயோட்டா கேம்ரி மற்றும் ஹூண்டாய் எலாண்ட்ரா உள்ளிட்ட கார்களிடம் இருந்து கடும் போட்டி எழ உள்ளது.

ஹோண்டா பிஆர்வி;

ஹோண்டா பிஆர்வி;

ஹோண்டா பிஆர்வி மிகவும் எதிர்பார்க்கபடும் எஸ்யூவி-களில் ஒன்றாக உள்ளது.

பிஆர்வி காம்பேக்ட் எஸ்யூவி, 2015 தாய்லாந்து மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யபட்டது. அப்போதில் இருந்து அதன் மீதான ஆவல், வாடிக்கையாளர்களிடையே அதிகரித்துள்ளது.

வடிவமைக்கபட்ட பிளாட்ஃபார்ம்;

வடிவமைக்கபட்ட பிளாட்ஃபார்ம்;

ஹோண்டா பிஆர்வி காம்பேக்ட் எஸ்யூவி, பிரியோ பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது.

ஹோண்டா அமேஸ் மற்றும் மோபிலியோ உள்ளிட்ட கார்களும் இந்த பிரியோ பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டே வடிவமைக்கபட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

பிஆர்வி எஸ்யூவி, ஹோண்டாவின் 1.5 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜினுடன் வெளியாக உள்ளது.

போட்டி கார்கள்;

போட்டி கார்கள்;

ஹோண்டா பிஆர்வி காருக்கு, சந்தையில் மிக பிரபலமாக உள்ள ஹூண்டாய் க்ரெட்டா தான் முக்கிய போட்டியாக விளங்க உள்ளதாக தெரிகிறது.

மேலும், ரெனோ டஸ்டர், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா டியூவி 300 உள்ளிட்ட கார்களும், போட்டி கார்களாக விளங்குகின்றது.

விலை;

விலை;

ஹோண்டா பிஆர்வி காம்பேக்ட் எஸ்யூவியின் விலை, அதன் போட்டி கார்களின் விலையை காட்டிலும் சற்று விலை உயர்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஹோண்டா பிஆர் வி காம்பேக்ட் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம்

ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவி இந்தோனேஷியாவில் அறிமுகம்... விரைவில் இந்தியாவில்...

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

English summary
Honda BR-V and New Accord are the 2 Cars from Honda Cars India, which would be showcased at the 2016 Delhi Auto Expo in Delhi. New Accord premium sedan is making its comeback in India in different avatar. Honda BR-V compact SUV is touted to be one of the most anticipated Cars in India.
Story first published: Thursday, December 17, 2015, 16:53 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark