ஹோண்டா பிஆர் வி எஸ்யூவியின் இந்திய வருகையை உறுதியானது!

By Saravana

அடுத்த நிதி ஆண்டில் புதிய ஹோண்டா பிஆர்- வி எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக, ஹோண்டா கார் இந்தியா நிறுவனத்தின் தலைவர் கட்சுஷி இனோவு தெரிவித்துள்ளார்.

இந்தோனேஷியாவில் இந்த புதிய எஸ்யூவி மாடலுக்கு ஏற்கனவே முன்பதிவு துவங்கிவிட்டது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் அங்கு விற்பனைக்கு வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து, இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது ஹோண்டா கார் இந்தியா நிறுவனத்தின் தலைவரும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி எஸ் க்ராஸ், ரெனோ டஸ்ட்டர் உள்ளிட்ட மாடல்கள் போட்டி போடும், காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் இந்த புதிய க்ராஸ்ஓவர் ரக மாடல் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட இருப்பதால், விலையிலும் மிக சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

பிரியோ கார் அடிப்படையிலான எஸ்யூவி மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், எஸ்யூவி ரக கார்களின் இலக்கணத்திற்குண்டான வலிமையான க்ரோம் பட்டை க்ரில் அமைப்பு, பகல்நேர விளக்குகளுடன் கூடிய புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், வலிமையான பம்பர், பெரிய வீல் ஆர்ச்சுகள், பாடி கிளாடிங்குகள் , டிஃபியூசர் போன்ற பாகங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. மேலும், இந்த காரின் கிரவுண்ட் கிளிரயன்ஸ் 200மிமீ என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்டிரியர்

இன்டிரியர்

பிரியோ, அமேஸ் போன்று இல்லாமல் முற்றிலும் புதிய டேஷ்போர்டு அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் வசதியும் புதிய ஹோண்டா பிஆர் வி எஸ்யூவியில் இருக்கும். அத்துடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் நவீனமான காருக்கான அம்சத்தை வழங்குகிறது.

எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

ஹோண்டா சிட்டி காரில் இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் இந்த புதிய ஹோண்டா பிஆர்- வி எஸ்யூவியிலும் பயன்படுத்தபட இருக்கிறது. இந்த எஞ்சின் 120 பிஎஸ் பவரை அளிக்க வல்லதாக இருக்கும். அதேநேரத்தில், சிட்டி, அமேஸ், மொபிலியோ கார்களில் இருக்கும் வழக்கமான 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு பதிலாக, புதிய 1.6 லிட்டர் எர்த் ட்ரீம்ஸ் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசேஷம் என்ன?

விசேஷம் என்ன?

ஹூண்டாய் க்ரெட்டா, ரெனோ டஸ்ட்டரைவிட்டு இந்த எஸ்யூவியை வாங்குவதற்கு முக்கியமான விஷயமாக ஒன்றை கூறலாம். அது இருக்கை வசதி. ஆம், இந்த எஸ்யூவி 2+3+2 என்ற மூன்று வரிசை இருக்கை அமைப்பை கொண்டதாக வருகிறது. அதிகபட்சமாக 7 பேர் வரை பயணிக்க முடியும் என்பது இந்த எஸ்யூவியின் மிக முக்கியமான சிறப்பம்சமாக இருக்கும். இது வாடிக்கையாளர்களை நிச்சயம் யோசிக்க வைக்கும் விஷயமாக இருக்கும்.

 பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

இப்போது இந்தியாவில் அறிமுகமாகும் புதிய மாடல்கள் அனைத்திலும் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், இந்த புதிய ஹோண்டா பிஆர் வி எஸ்யூவியில் எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் சிஸ்டத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும், ஓட்டுனர் மற்றும் முன்புற பயணிக்கான டியூவல் ஏர்பேக்குகளும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக அனைத்து வேரியண்ட்டுகளிலும் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய உதிரிபாகங்கள்

இந்திய உதிரிபாகங்கள்

ராஜஸ்தான் மாநிலம், தபுகெராவில் உள்ள ஆலையில்தான் புதிய ஹோண்டா பிஆர் வி எஸ்யூவி உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. அதிக அளவில் இந்திய சப்ளையர்களிமிருந்தே உதிரிபாகங்கள் பெறப்பட்டு உற்பத்தி செய்யப்படும். தேவைக்கு ஏற்ப ஹோண்டா பிஆர் வி எஸ்யூவியின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் வாய்ப்புகள் நிரம்பவே இருக்கின்றன.

 அறிமுகம்

அறிமுகம்

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய எஸ்யூவி மாடலை ஹோண்டா கார் இந்தியா நிறுவனம் பார்வைக்கு வைக்கும் என்று தெரிகிறது. அடுத்த ஆண்டு மார்ச் 20ந் தேதிக்கு பின்னர் எப்போது வேண்டுமானாலும் இந்த புதிய எஸ்யூவி மாடலை ஹோண்டா கார் இந்தியா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. எனவே, அடுத்த ஆண்டு மத்தியில் இந்த புதிய 7 சீட்டர் எஸ்யூவி மாடலை எதிர்பார்க்கலாம்.

 எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.8.5 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, புதிய ஹோண்டா பிஆர் வி எஸ்யூவியின் விலை நிர்ணயம் செய்வது குறித்து பணிகளிலும் தற்போது ஈடுபட்டிருப்பதாகவும் ஹோண்டா கார் இந்தியா நிறுவனத்தின் தலைவர் கட்சுஷி இனோவு கூறியிருக்கிறார்.

Most Read Articles
English summary
Honda BR-V Compact SUV To Be Launched In India By Mid-2016.
Story first published: Tuesday, October 27, 2015, 10:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X