இந்தியாவில் ஹோண்டாவின் காம்பேக்ட் எஸ்யூவி இறக்குமதி!

Posted By:

ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக, பிரியோ அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலை ஹோண்டா கார் நிறுவனம் இறக்குமதி செய்துள்ளது.

Zauba.com என்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனத்தின் இணையதளத்தின் மூலமாக இந்த தகவல் உறுதியாகியுள்ளது. ஆவலை கிளறும் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடல் குறித்த தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

குறியீட்டுப் பெயர்

குறியீட்டுப் பெயர்

2SJ என்ற குறியீட்டுப் பெயரில் இந்த கான்செப்ட் மாடலில் 3 கார்களை ஹோண்டா இறக்குமதி செய்துள்ளது. இந்த மாதிரி எஸ்யூவி மாடல்கள் தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது.

டெல்லி ஆராய்ச்சி மையம்

டெல்லி ஆராய்ச்சி மையம்

டெல்லி அருகே, கிரேட்டர் நொய்டாவில் அமைக்கப்பட்டிருக்கும் ஹோண்டாவின் புதிய ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தில் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடல்கள் இந்தியாவிற்கு தக்க அம்சங்களுடன் தயாரிப்பு நிலை மாடலாக மேம்படுத்தப்பட உள்ளன.

காம்பேக்ட் எஸ்யூவியா?

காம்பேக்ட் எஸ்யூவியா?

இந்த கான்செப்ட் மாடல்கள் 4 மீட்டருக்கும் அதிகமான நீளத்தை கொண்டிருக்கும். அதாவது, ரெனோ டஸ்ட்டர் போன்று 4 மீட்டருக்கும் சற்று கூடுதலாக நீளத்தை கொண்டிருக்கும்.

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலில் 1.5 லிட்டர் ஐ- விடெக் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளது.

டிசைன்

டிசைன்

இது பிரியோ அடிப்படையிலான மாடல் என்பதால், அமேஸ், மொபிலியோ போன்றே இதன் முகப்பும் அந்த சாயலை ஒத்திருக்கும். அதேநேரத்தில், பிரியோ, அமேஸ் மற்றும் மொபிலியோ கார்களின் இன்டிரியர் மிக எளிமையாக இருந்தது வாடிக்கையாளர்களை கவரவில்லை. எனவே, இன்டிரியரில் மாற்றங்களை செய்து அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளதாம்.

அறிமுகம்

அறிமுகம்

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், இந்த காம்பேக்ட் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு பிற்பகுதியில் அல்லது 2017ம் ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

 போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

ஹூண்டாய் க்ரெட்டா, ரெனோ டஸ்ட்டர், நிசான் டெரானோ போன்ற மாடல்களுக்கு இது நேரடி போட்டியாக இருக்கும். அதேநேரத்தில், இது ஒரு 7 சீட்டராக இருக்கவும் வாய்ப்பிருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
English summary
The research and development of Honda's compact SUV will be done at their facility in Greater Noida. It is possible that this new model will not be a sub-4 metre product and will be bigger in terms of size.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark