இந்தியாவில் 2.23 லட்சம் கார்களுக்கு ஹோண்டா ரீகால்!

Written By:

உயிர் காக்கும் காற்றுப்பையில் குறைபாடுடைய உதிரிபாகத்தை ஆய்வு செய்து மாற்றித் தருவதற்காக, இந்தியாவில் 2.23 லட்சம் கார்களை திரும்ப அழைக்க இருப்பதாக ஹோண்டா கார் நிறுவனம் அறிவித்துள்ளது.

முந்தைய தலைமுறை ஹோண்டா சிவிக், சிட்டி, ஜாஸ் மற்றும் சிஆர்-வி ஆகிய 4 மாடல்கள் இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கையில் இடம்பெற்றிருக்கிறது.

உயிர் காக்கும் காற்றுப் பையில் இருக்கும் இன்ஃப்ளேட்டரை ஆய்வு செய்து, குறைபாடு இருப்பின், இலவசமாக மாற்றித் தரப்படும் என்று ஹோண்டா கார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Honda City
 

அடுத்த மாதம் 12ந் தேதி முதல் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா டீலர்கள் வாயிலாக, இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கை துவங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மொத்தமாக 2,23,578 கார்களை ஹோண்டா கார் இந்தியா நிறுவனம் அழைக்க இருக்கிறது. 2003ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட கார்கள் இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கையில் இடம்பெற்றிருக்கிறது.

Table
 

இந்த திரும்ப பெறும் நடவடிக்கையில் உங்களது ஹோண்டா காரும் இடம்பெற்றிருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதற்கு கீழ்கண்ட இணைப்பில் சென்று காரின் 17 இலக்க வின் நம்பரை கொடுத்து தெரிந்து கொள்ளலாம்.

ரீ கால் செய்யப்பட்ட ஹோண்டா கார்களின் விபரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

English summary
Honda Cars India Ltd (HCIL) today announced that it will voluntarily replace Airbag inflators of 223,578 vehicles of previous generations of CR-V, Civic, City and Jazz as part of Honda’s preventive global recall campaign concerning Air Bag inflators.
Story first published: Friday, September 18, 2015, 18:58 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark