சிட்டி, அமேஸ் புண்ணியத்தில் காலரை தூக்கிவிட்ட ஹோண்டா!

By Saravana

சிட்டி, அமேஸ் கார்களின் புண்ணியத்தில் ஹோண்டா நிறுவனத்தின் கார் விற்பனை கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு டிசம்பரில் வெறும் 5,493 கார்களை விற்றிருந்த ஹோண்டா கார் நிறுவனம், கடந்த டிசம்பர் மாதம் 14,428 கார்களை விற்பனை செய்து காலரை தூக்கிவிட்டுள்ளது. இது 163 சதவீத வளர்ச்சியாகும்.

Honda Car

கடந்த மாதம் 620 கார்களை ஹோண்டா ஏற்றுமதி செய்துள்ளது. அதனையும் சேர்த்தால் ஹோண்டாவின் விற்பனை 15,000ஐ கடந்திருக்கிறது. மேலும், 2013ம் ஆண்டில் 1,07,661 கார்களை விற்பனை செய்திருந்த ஹோண்டா, கடந்த ஆண்டு 1,79,816 கார்களை விற்பனை செய்திருக்கிறது. இது 67 சதவீத வளர்ச்சியாகும்.

ஹோண்டாவின் விற்பனை வளர்ச்சிக்கு சிட்டி மற்றும் அமேஸ் கார்களின் பங்களிப்புதான் மிக மிக முக்கியமானதாக இருந்துள்ளது. கடந்த மாதம் 6,012 சிட்டி கார்களையும், 5,176 அமேஸ் கார்களையும் ஹோண்டா விற்பனை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Honda Cars India Ltd. (HCIL), one of India's leading manufacturer of premium cars, has clocked 14,428 units of domestic sales in the month of December 2014 as against 5,493 units sold during December 2013, registering a sales growth of 163 percent.
Story first published: Saturday, January 3, 2015, 9:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X