ஹோண்டா கார்களுக்கான புதிய ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் அறிமுகம்

Written By:

ஹோண்டா நிறுவனம் சார்பாக, 'ஹோண்டா கனெக்ட்' என்ற புதிய ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனை (ஆப்) என்னும் மிக மேம்பட்ட தகவல் பிளாட்ஃபார்ம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர்.

இந்திய வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்யபட்டுள்ள இந்த 'ஹோண்டா கனெக்ட்' அப்ளிகேஷன் (ஆப்), ஹோண்டா கார் வாடிக்கையாளர், அவரது குடும்பம் மற்றும் அவர்களது ஹோண்டா கார்களுக்கு இடையே ஒரு பொதுவான தகவல் பரிமாற்றம் செய்யும் தடமாக விளங்குகின்றது.

இந்த 'ஹோண்டா கனெக்ட்' அப்ளிகேஷன் (ஆப்) வசதியுடன், காரில் சேர்க்கபட்டுள்ள 'ஹோண்டா கனெக்ட்' அம்சங்களும் ஒருங்கிணைக்க பட்டுள்ளது. இதனால், ஹோண்டா கார்களின் உரிமையாளராக இருக்கும் அனுபவம், மேலும் பாதுகாப்பானதாகவும், சந்தோஷமானதாகவும் மாறி விடுகிறது.

'ஹோண்டா கனெக்ட்' அப்ளிகேஷன் (ஆப்) அடிப்படையில் ஸ்மார்ட்ஃபோனை கொண்டு இயங்குகிறது. 'ஹோண்டா கனெக்ட்' பல்வேறு வகையிலான விரிவான அம்சங்களை கொண்டுள்ளது. 'ஹோண்டா கனெக்ட்' மூலம் வாடிக்கையாளர்கள், ஹோண்டா கார்கள் குறித்தும், இதர சேவைகள் குறித்தும் மிக விரிவான தகவல்களை பெற முடியும்.

இந்த தகவல்களை, நீங்கள் கார்களுக்கு அருகில் இருக்கும் போதும், காரை விட்டு தூரத்தில் விலகி இருக்கும் போதும் பெறலாம் என்பது மிக முக்கியமான சிறப்பு அம்சமாகும். இதனால், ஹோண்டா கார்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மிக அதிக அளவிலான பாதுகாப்பு தன்மையை உணர முடியும்.

இந்த 'ஹோண்டா கனெக்ட்' அப்ளிகேஷன் (ஆப்) வசதியானது, மிண்டா ஐ-கனெக்ட் என்ற நிறுவனத்தால், உருவாக்கபட்டுள்ளது. 'ஹோண்டா கனெக்ட்' தற்போதைய நிலையில், அண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் இயங்கும் வகையில் உள்ளது.

இந்த 'ஹோண்டா கனெக்ட்' அப்ளிகேஷனை (ஆப்), இந்தியாவில் உள்ளவர்கள், ஆப்பிள் ஆப் மற்றும் கூகிள் பிளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

honda connect - advanced information platform launched in india

'ஹோண்டா கனெக்ட்' அப்ளிகேஷனில் (ஆப்) கிடைக்கும் சில முக்கிய வசதிகள்;

(*) சர்வீஸ் புக்கிங் / அலர்ட்ஸ்

(*) வாட்'ஸ் நியூ அண்ட் (மற்றும்) ஃபீட்பேக் சிஸ்டம்

(*) மேனுவல் எஸ்ஓஎஸ் ஃப்யூச்சர்

(*) இன்சூரன்ஸ் மற்றும் பியூசி ரென்யூவல்

(*) ஃப்யூவல் லாக்

(*) இம்பேக்ட் அலர்ட்

(*) லொகேட் மை கார்

(*) மை கார்'ஸ் ஹெல்த்

(*) ஷேர் மை லோகேஷன்

இப்படிபட்ட பல்வேறு மேம்படுத்தபட்ட வசதிகள், 'ஹோண்டா கனெக்ட்' அப்ளிகேஷன் (ஆப்) கிடைக்கின்றது என்பது குறிப்பிடதக்கது.

English summary
Honda has launched an advanced information platform for customers in India, which is called as the 'Honda Connect'. The Honda Connect enables as a platform for communication between the customer, car, his family, and their Honda vehicle. This Connect platform also supports Connected Car features with it. This in-turn makes the Honda vehicle ownership experience more safer and enjoyable.
Story first published: Wednesday, December 16, 2015, 14:55 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark