விரைவில் ஹோண்டா கார்களின் விலையும் உயர்கிறது!

Written By:

இந்தியாவில், அனைத்து கார் மாடல்களின் விலையையும் விரைவில் உயர்த்த முடிவு செய்துள்ளது ஹோண்டா கார் நிறுவனம்.

மூலப்பொருட்களின் விலை உயர்வும், ரூபாய் மதிப்பு சரிவும்தான், இந்த விலை உயர்வு முடிவுக்கு காரணமாக அமைந்திருப்பதாக ஹோண்டா கார் நிறுவனத்தின் அதிகாரி ஞானேஸ்வர் சென் கூறியிருக்கிறார்.

Honda Cars
 

அனைத்து கார்களின் விலையும் அதிகபட்சமாக 2 சதவீதம் வரை உயர்த்த அந்த நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

இதன் மூலமாக ஹோண்டா கார்களின் விலை ரூ.3,000 முதல் ரூ.30,000 வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை உயர்வு பண்டிகை காலத்தில் கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு கூடுதல் சுமையையும் ஏற்படுத்தும்.

ஒரு வாரத்தில் விலை உயர்வு அறிவிப்பை ஹோண்டா கார் நிறுவனம் முறைப்படி வெளியிடும் என்று தகவல்கள் கூறுகின்றன.

English summary
Japanese automobile manufacturer Honda car company claims that they will now hike the price of their Indian models. They reason for hiking price is to offset the rise in raw materials required by the manufacturer.
Story first published: Tuesday, September 1, 2015, 16:28 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark