ஹோண்டா கார்களின் விலை ரூ.60,000 வரை உயர்வு - விபரம்!

Written By:

ஹோண்டா கார்களின் விலை மாடலுக்கு தகுந்தவாறு ரூ.60,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கலால் வரிச்சலுகை ரத்து மற்றும் உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் விலையை உயர்த்தி இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிட்டி, அமேஸ் என அந்த நிறுவனத்தின் விற்பனையில் முன்னிலை வகிக்கும் அனைத்து மாடல்களின் விலையும் உயர்த்தப்பட்டிருப்பது, வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு விலை அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஸ்லைடரில் காணலாம்.

ஹோண்டா பிரியோ

ஹோண்டா பிரியோ

பிரியோ காரின் விலை வேரியண்ட்டுக்கு தகுந்தவாறு ரூ.15,000 முதல் ரூ.18,000 வரை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, ரூ.4.21 லட்சம் முதல் ரூ.6.30 லட்சம் வரையிலான விலையில் பிரியோ கார் இனி விற்பனை செய்யப்படும்.

ஹோண்டா பிரியோ காரின் சிறப்பம்சங்கள் விபரம்

ஹோண்டா அமேஸ்

ஹோண்டா அமேஸ்

ஹோண்டா அமேஸ் காரின் பெட்ரோல் மாடலின் விலை ரூ.19,000 முதல் ரூ.23,000 வரையிலும், டீசல் மாடலின் விலை ரூ.23,000 முதல் ரூ.26,000 வரையிலும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, இனி அமேஸ் கார் ரூ.5.18 லட்சம் முதல் ரூ.7.78 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

ஹோண்டா அமேஸ் காரின் சிறப்பம்சங்கள் விபரம்

ஹோண்டா சிட்டி

ஹோண்டா சிட்டி

ஹோண்டாவின் வெற்றிகரமான மிட்சைஸ் செடான் காரான சிட்டி காரின் விலை ரூ.48,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடலின் விலை ரூ.33,000 முதல் ரூ.46,000 வரையிலும், டீசல் மாடலின் விலை ரூ.37,000 முதல் ரூ.48,000 வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஹோண்டா சிட்டி கார் இனி ரூ.7.53 லட்சம் முதல் ரூ.11.53 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படும்.

ஹோண்டா சிட்டி காரின் சிறப்பம்சங்கள் விபரம்

 ஹோண்டா சிஆர்வி

ஹோண்டா சிஆர்வி

இதேபோன்று, சிஆர்வி எஸ்யூவியின் விலை ரூ.60,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இனி சிஆர்வி எஸ்யூவி ரூ.20.85 லட்சம் முதல் ரூ.24.96 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியின் சிறப்பம்சங்கள் விபரம்

ஹோண்டா மொபிலியோ

ஹோண்டா மொபிலியோ

மொபிலியோ எம்பிவி காரின் விலை உயர்வு குறித்து தற்போது அறிவிக்கப்படவில்லை. ஆனால், விலையை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருவதாக ஹோண்டா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹோண்டா கார்களின் விலை உயர்வு வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.

மொபிலியோ எம்பிவி காரின் சிறப்பம்சங்கள் விபரம்

 
English summary

 Honda Cars India has increased prices of its vehicles by up to Rs. 60,000 following the expiry of reduced excise duty concessions and also to offset rising input costs. 
Story first published: Tuesday, January 6, 2015, 10:07 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark