புதிய ஜாஸ் காருக்கு நல்ல வரவேற்பு... ஹோண்டா உற்சாகம்!

By Saravana

அடுத்த வாரம் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் புதிய ஹோண்டா ஜாஸ் காருக்கு சிறப்பான முன்பதிவு கிடைத்திருக்கிறது. விலை விபரம் வெளியாவதற்கு முன்பே, கடந்த மாதம் மட்டும் 2,336 முன்பதிவுகளை புதிய ஹோண்டா ஜாஸ் கார் பெற்றிருக்கிறது.

புதிய ஜாஸ் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதன் மூலம், ஹோண்டா கார் நிறுவனம் உற்சாகமடைந்துள்ளது. புதிய ஜாஸ் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதற்கான சில காரணங்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன்

டிசைன்

புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் காரின் டிசைன் பலரையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரியோ சிறந்த மாடலாக இருந்தாலும், டிசைனால் விற்பனையில் மேலே எழ முடியவில்லை. அந்த குறையை போக்கும் விதத்தில் சிறப்பான டிசைனுடன் வருகை தருகிறது புதிய ஹோண்டா ஜாஸ் கார்.

எஞ்சின்

எஞ்சின்

புதிய ஹோண்டா ஜாஸ் கார் முதல்முறையாக டீசல் மாடலிலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அமேஸ், சிட்டி, மொபிலியோ கார்களில் செயல்புரிந்து வரும் 1.5 லிட்டர் ஐ- டிடெக் டீசல் எஞ்சினுடன் இந்த கார் வருகிறது. இந்த எஞ்சின் செயல்திறன் மற்றும் மைலேஜில் இந்திய வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றிருப்பதும் முக்கிய காரணம். இதுதவிர, 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலிலும் கிடைக்கும்.

கியர்பாக்ஸ்

கியர்பாக்ஸ்

பெட்ரோல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட ஆப்ஷன்களிலும், டீசல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடலிலும் கிடைக்கும்.

மைலேஜ்

மைலேஜ்

இதன் ரகத்தை ஒத்த கார்களில் அதிக மைலேஜ் தரும் மாடல் என்ற பெருமையை புதிய ஜாஸ் காரின் டீசல் மாடல் பெற இருக்கிறது. புதிய ஜாஸ் காரின் டீசல் மாடல் லிட்டருக்கு 27.3 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்று வழங்கியிருப்பது இந்த காரின் விற்பனைக்கு மிகவும் பக்கபலமாக இருக்கும். மேலும், மாருதி டிசையருக்கு அடுத்து, இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையையும் பெற இருக்கிறது. இதன் பெட்ரோல் மாடலை பொறுத்தவரை மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 18.7 கிமீ மைலேஜையும், சிவிடி மாடல் லிட்டருக்கு 19 கிமீ மைலேஜையும் தரும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதும் முன்பதிவு முரணில்லாமல் செல்ல உதவியிருக்கிறது.

 வேரியண்ட்டுகள்

வேரியண்ட்டுகள்

பெட்ரோல், டீசல் மாடல்களின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல்கள் தலா 5 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. பெட்ரோல் மாடலின் சிவிடி கியர்பாக்ஸ் மாடல் இரண்டு வேரியண்ட்டுகளில் மட்டுமே வர இருக்கிறது.

முன்பதிவு

முன்பதிவு

ரூ.21,000 முன்பணத்துடன் ஹோண்டா கார் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களில் முன்பதிவு செய்யப்படுகிறது. வரும் 9ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Most Read Articles
English summary
Honda Cars India has already received over 2,336 bookings for new Jazz car in June, 2015.
Story first published: Thursday, July 2, 2015, 9:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X