ஜூலை 8ந் தேதி விற்பனைக்கு வருகிறது புதிய ஹோண்டா ஜாஸ்!

Written By:

வரும் ஜூலை 8ந் தேதி புதிய ஹோண்டா ஜாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

வடிவமைப்பிலும், வசதிகளிலும் மிகவும் பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மாடலாக புதிய ஜாஸ் இருக்கும். அதேபோன்று, பெட்ரோல் மாடல் மட்டுமின்றி, முதல்முறையாக டீசல் மாடலிலும் இந்த கார் வர இருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

New Honda Jazz
 

இந்த புதிய ஜாஸ் காரில் அமேஸ் காம்பேக்ட் செடான் காரில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்டதாக வர இருக்கிறது. பெட்ரோல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாகவும், டீசல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாகவும் வருகிறது.

ஹூண்டாய் எலைட் ஐ20, ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் மாருதி ஸ்விஃப்ட் போன்ற கார் மாடல்களுக்கு இது நேரடி போட்டியாக இருக்கும். ரூ.4.90 லட்சம் விலையிலிருந்து ரூ.9 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
The Japanese car maker Honda is keen on introducing its premium hatchback for India. It is now confirmed that Honda will officially be launching its all new Jazz on the 8th of July, 2015.
Story first published: Thursday, May 14, 2015, 11:07 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark