ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவி இந்தோனேஷியாவில் அறிமுகம்... விரைவில் இந்தியாவில்...!!

By Ravichandran

ஹோண்டா நிறுவனம், தஙகளின் பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவி காரை இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்துள்ளனர். இந்த புதிய மாடல் விரைவில் இந்திய மண்ணிலும் தடம் பதிக்க இருக்கிறது.

ஹோண்டா நிறுவனம், சமீபகாலமாக கான்செப்ட் நிலையில் உள்ள பல்வேறு கார்களையும், தயாரிப்புக்கு தயார் நிலையில் உள்ள பல்வேறு கார்களையும் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்து வருகின்றனர்.

இந்தோனேஷியாவில் அறிமுகம்;

இந்தோனேஷியாவில் அறிமுகம்;

முன்னதாக, ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவி, 2015 இந்தோனேஷிய மோட்டார் ஷோவில் கான்செப்ட் காராக காட்சிபடுத்தபட்டது.

ப்ரி-புக்கிங்;

ப்ரி-புக்கிங்;

ப்ரி-புக்கிங் எனப்படும் அறிமுகத்திற்கு முந்தைய புக்கிங்குகள், ஏற்று கொள்ளபட்டு வந்தது. இந்த ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு 4,000-ற்கும் கூடுதலான புக்கிங்கள் ஏற்று கொள்ளபட்டது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யபட்டுள்ள ஹோண்டா பிஆர்-வி கார், சிங்கில் 1.5-லிட்டர் ஐவிடெக், பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின் 6-ஸ்பீட் மேனுவல் அல்லது தேர்வு முறையிலான சிவிடி கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது. இந்த இஞ்ஜின் 118.31 பிஹெச்பி-யையும், 145 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இந்தியாவிற்கான இஞ்ஜின் தேர்வு;

இந்தியாவிற்கான இஞ்ஜின் தேர்வு;

ஹோண்டா நிறுவனம், இந்தியாவை பொருத்த வரை, 1.5-லிட்டர், ஐடிடெக் டீசல் இஞ்ஜினுடன் கூடிய ஹோண்டா பிஆர்-வி கார்களை அறிமுகம் செய்ய உள்ளனர்.

போட்டி கார்கள்;

போட்டி கார்கள்;

இந்த புதிய ஹோண்டா பிஆர்-வி, இந்திய சந்தையில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸுகி எஸ் க்ராஸ் மற்றும் ரெனோ டஸ்ட்டர் உள்ளிட்ட கார்களுடன் போட்டி போட வேண்டியதாக இருக்கும்.

7 சீட்டர்;

7 சீட்டர்;

போட்டி காம்பேக்ட் எஸ்யூவி மாடல்கள் அனைத்தும் 5 சீட்டராக இருக்கும் நிலையில், இந்த கார் 7 சீட்டர் காம்பேக்ட் எஸ்யூவியாக வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேஷிய விலை விவரங்கள்;

இந்தோனேஷிய விலை விவரங்கள்;

ஹோண்டா பிஆர்-வி எஸ் மேனுவல் டிரான்ஸ்மிஷன் - 22,65,00,000 இந்தோனேஷிய ருபையா (இந்திய மதிப்பில் சுமார் 10.93 லட்சம் ரூபாய்)

ஹோண்டா பிஆர்-வி ஈ மேனுவல் டிரான்ஸ்மிஷன் - 23,65,00,000 இந்தோனேஷிய ருபையா (இந்திய மதிப்பில் சுமார் 11.42 லட்சம் ரூபாய்)

ஹோண்டா பிஆர்-வி ஈ சிவிடி - 24,65,00,000 இந்தோனேஷிய ருபையா (இந்திய மதிப்பில் சுமார் 11.90 லட்சம் ரூபாய்)

ஹோண்டா பிஆர்-வி ஈ பிரெஸ்டீஜ் சிவிடி - 26,15,00,000 இந்தோனேஷிய ருபையா (இந்திய மதிப்பில் சுமார் 12.63 லட்சம் ரூபாய்)

இந்திய விலை விவரம்;

இந்திய விலை விவரம்;

ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவி காரின் பேஸ் வேரியண்ட் இந்தியாவில் 8 லட்சம் ரூபாயில் விற்கபடலாம்.

டாப்-எண்ட் வேரியண்ட் எனப்படும் உயர் ரக கார்கள், இந்தியாவில் சுமார் 12 லட்சம் ரூபாயில் விற்கபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

Most Read Articles
English summary
Honda has launched the BR-V SUV In Indonesia. This new Honda BR-V compact SUV is expected to be launched in India soon. This Honda BR-V was earlier showcased at the 2015 Indonesian Motor Show. Pre-bookings were accepted and Honda had received over 4,000 orders, prior to the launch of this SUV.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X