ரெனோ க்விட் எஃபெக்ட்: குட்டி காரை களமிறக்க ஹோண்டா திட்டம்

Written By:

ரெனோ க்விட் கார் கிடைத்திருக்கும் வரவேற்பு, பல நிறுவனங்களை தீவிரமாக யோசிக்க வைத்திருக்கிறது. இந்த செக்மென்ட்டில் அதிக வர்த்தக வாய்ப்புகள் இருந்தும், பல நிறுவனங்கள் களமிறங்க தயக்கம் காட்டின.

ஏன், ஜப்பானிய நிறுவனமான ஹோண்டா கார் நிறுவனமும் கூட பிரியோவை விட சின்ன காரை இந்தியாவல் அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை என்று தெரிவித்தது. இந்த நிலையில், ரெனோ க்விட் காருக்கு கிடைத்திருக்கும் அமோக வரவேற்பு, ஹோண்டா நிறுவனத்தை சிந்திக்க வைத்துள்ளது. மேலும், பிரியோ காரின் விற்பனை பங்களிப்பும் மிக குறைவாக இருப்பதால், இந்த புதிய முடிவை எடுத்துள்ளது.

Honda Brio
 

இதுகுறித்து டோக்கியோ மோட்டார் ஷோவில் பேசிய ஹோண்டா நிறுவனத்தின் தலைவர் தகஹிரோ ஹச்சிகோ, " இந்திய மார்க்கெட்டில் சிறிய காரை அறிமுகம் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்.

அதிக மக்கள் தொகை இந்தியாவில் வர்த்தக வாய்ப்புகளையும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் விதத்தில் கார்களை அறிமுகம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், இந்தியாவிலேயே புதிய கார்களை வடிவமைத்து தயாரித்து விற்பனை செய்வதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

English summary
Japanese car maker Honda is considering of a small car launch in India to get into the volumes game and take on the likes of Maruti Suzuki.
Story first published: Saturday, October 31, 2015, 11:16 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark