இந்தியாவில், ஹோண்டா சிட்டி, மொபிலியோ கார்கள் திரும்ப அழைக்கப்படுகிறது

Written By:

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஹோண்டா சிட்டி மற்றும் மொபிலியோ கார்களின் டீசல் மாடல்கள் திரும்ப அழைக்கப்பட உள்ளன.

இந்த இரு கார்களின் டீசல் மாடல்களிலும், எஞ்சினில் எரிக்கப்படாத எரிபொருளை மீண்டும் டீசல் டேங்கிற்கு எடுத்துச் செல்லும் குழாய் கழன்று கசிவு ஏற்படும் வாய்ப்பு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால், எஞ்சின் இயக்கம் திடீரென நின்றுபோகும் வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்திருக்கிறது.

ஹோண்டா சிட்டி
 

இதையடுத்து, குறைபாடுடைய எரிபொருள் குழாயை மாற்றித் தருவதற்காக, இந்தியாவில் 2013ம் ஆண்டு டிசம்பர் முதல் இந்த ஆண்டு ஜூலை வரை தயாரிக்கப்பட்ட 64,428 ஹோண்டா சிட்டி டீசல் கார்களும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த ஆண்டு ஜூலை வரை தயாரிக்கப்பட்ட 25,782 மொபிலியோ டீசல் கார்களும் திரும்ப அழைக்கப்பட உள்ளன.

குறைபாடுடைய எரிபொருள் குழாயை இலவசமாக மாற்றித் தரப்படும் என்று ஹோண்டா கார் நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று ஹோண்டா கார் நிறுவனம் கூறியிருக்கிறது.

ஹோண்டா மொபிலியோ
 

திரும்ப அழைக்கப்படும் நடவடிக்கையில் உங்களது கார் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள உங்களது காரின் 17 இலக்க வின் நம்பரை கீழே உள்ள இணைப்பில் கொடுத்து தெரிந்து கொள்ளலாம்.

ரீகால் செய்யப்படும் கார்களின் விபரம்!

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark