ஷாங்காய் ஆட்டோ ஷோவில் அழகிகளுக்கு தடை விதிக்க சீன அரசு முடிவு?

Written By:

சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஆட்டோமொபைல் கண்காட்சி, உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. சீனா மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் இந்த கண்காட்சியை காண பார்வையாளர்களும், ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்களும் வருவது வாடிக்கை.

அப்படி வரும் பார்வையாளர்களின் கவனத்தை தங்களது பக்கம் திருப்புவதற்காக, வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது அரங்கில் கவர்ச்சி கன்னிகளை நிறுத்தி ஈர்ப்பது வாடிக்கையான விஷயம். இந்த நிலையில், இது கலாச்சார சீர்கேடுக்கு வழிவகுப்பதாக கூறி, ஷாங்காய் ஆட்டோமொபைல் கண்காட்சியில் அழகிகளுக்கு தடை விதிக்க ஏற்பாட்டாளர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.

hOT bABES
 

வரும் ஏப்ரல் மாதம் 22ந் தேதி துவங்கும் ஷாங்காய் கண்காட்சியில் அழகிகளுக்கு தடை விதிப்பது குறித்து சீன அரசு பரிசீலித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஷாங்காய் கண்காட்சி அரங்குகளில் அழகிகளை நிறுத்துவதை தவிர்க்குமாறு ஏற்பாட்டாளர்களிடமிருந்து வாய்மொழி தகவல் வந்துள்ளதாக கீலி வாகன தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்தார்.

கடந்த ஆண்டு சீனாவின் புதிய அதிபராக பதவியேற்ற ஜின்பிங் கலாச்சார சீர்கேடான விஷயங்களில் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பது நினைவுக்கூறத்தக்கது.

English summary
Victor Yang, spokesman of Geely Automobile Holdings Ltd, says on Jan 9 that the company has received verbal notice from the Shanghai auto-show organiser that no models can be used at the week-long event, which starts on April 20.
Story first published: Wednesday, January 14, 2015, 12:00 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark