கார் கடன்களை பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும் - தெரிந்து கொள்ள, இதை படிக்கவும்

Written By:

புதிய கார் வாங்க இந்தியாலெண்ட்ஸ் என்ற நிறுவனம் பல்வேறு வகையிலான திட்டங்களை வழங்குகிறது.

வாகனங்கள் வாங்க பல எளிய வழிகள் உள்ளன. ஃபைனான்ஸ் மூலம் கார்கள் வாங்குவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

சிபில் மூலமான நிராகரிப்பு;

சிபில் மூலமான நிராகரிப்பு;

தற்போதைய காலத்தில் ஏராளமானோர், கார் கடன் மூலம் வாகனங்களை வாங்குகின்றனர். கார்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான ஆஃபர்கள் வழங்கபடுகிறது.

ஆனால், சிலர் கார் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, வங்கி கணக்கு மற்றும் பரிவர்த்தனை வரலாற்றை கூர்மையாக கண்காணிக்கும் சிபில் எனப்படும் கிரெடிட் இன்ஃபர்மேஷன் பீரோ (இந்தியா) லிமிடெட் அமைப்பு அவர்களது கடன் விண்ணபத்தை நிராகரிக்கும் வாய்ப்புகளும் உள்ளது.

நிராகரிக்கபடும் கடன்களுக்கான தீர்வு;

நிராகரிக்கபடும் கடன்களுக்கான தீர்வு;

இப்படி நிராகரிக்கபடும் கார் கடன் தேவைபடுவோர் புதிய காருக்கான கடனை எப்படி பெற முடியும்?

இதற்கு தீர்வுகள் தரும் வகையில் இந்தியாலெண்ட்ஸ் என்ற நிறுவனம் அமைந்துள்ளது. டெல்லியை மையமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனம்

குறைந்த வட்டியில் கடன் வாய்ப்புகளை நாடும் வாடிக்கையாளர்களையும், அமைப்பு ரீதியான கடன் கொடுப்பவர்களையும் இணைக்கிறது.

மேலும் இந்த நிறுவனம் கடன் பெறுவதற்கான சில எளிய ஆலோசனைகளையும் வழங்குகிறது.

இந்தியாலெண்ட்ஸ் நிறுவனம் பற்றி...

இந்தியாலெண்ட்ஸ் நிறுவனம் பற்றி...

இந்தியாலெண்ட்ஸ் என்பது ஒரு ஆன்லைன் கடன் வழங்கும் சந்தை போல் இயங்கும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், குறைந்த வட்டியில் கடன் வாய்ப்புகள் தேடும் நபர்களையும், கடன் வழங்குநர்களுக்கும் பாலமாக விளங்குகிறது.

டெல்லியை மையமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்திற்கு இதன் நிறுவனர் கௌரவ் சோப்ரா தலைமை வகிக்கிறார்.

டிப் 1 - அனைத்து செலவுகளையும் கணக்கிடவும்;

டிப் 1 - அனைத்து செலவுகளையும் கணக்கிடவும்;

கார் கடன்கள் வாங்குவதிலேயே மிக முக்கியமான விஷயமே, உங்களின் அனைத்து செலவுகளையும் கணக்கிடுவதில் தான் உள்ளது.

இன்சூரன்ஸ், ரெஜிஸ்ட்ரேஷன், ஃப்யூவல், கார் பராமரிப்பு உள்ளிட்ட செலவுகள் அல்லாமல் மாதாந்திர ஈஎம்ஐ தொகையாக உங்களால் எவ்வளவு செலுத்த முடியும் என்பதை தீர்மாணித்து கொள்ளுங்கள்.

காரை அடிக்கடி உபயோகிக்க முடியாவிட்டாலோ அல்லது அதனை பராமரிக்க முடியாவிட்டாலோ காரை வாங்குவதில் பயன்கள் எதுவும் இல்லை.

எரிபொருள் மற்றும் பராமரிப்பு மாதாந்திரம் செய்யபட வேண்டிய நிலையில், சில நேரங்களில் எதிர்பாராத நேரத்திலும் செய்ய் வேண்டி இருக்கலாம். இதற்காகவும் தயாராக வேண்டியது அவசியமாகிறது.

டிப் 2 - கிரெடிட் ஸ்கோர்களை தெரிந்து கொள்ளவும்;

டிப் 2 - கிரெடிட் ஸ்கோர்களை தெரிந்து கொள்ளவும்;

எந்த ஒரு வங்கியும் அல்லது தனியார் நிறுவனங்கலும் உங்களின் கார் கடன் விண்ணபத்திற்கு ஒப்புதல் அளிக்க, உங்களின் சிபில் ஸ்கோர் (மதிப்பீடு) மிக முக்கியமான அம்சாக விளங்குகிறது.

உங்களின் சிபில் ஸ்கோர் எவ்வளவு உயர்ந்ததாக உள்ளதோ, அதை பொருத்து உங்களுக்கு கடன் கிடைக்கும் வாய்ப்புகளும் அதிகரிக்கிறது. மேலும், உங்களுக்கு தகுந்த வட்டி விகிதங்கள் தேர்வு செய்வதற்கான வாய்ப்புகளும் கிடைக்கின்றது.

உங்களின் சிபில் ஸ்கோர் உயர்ந்த நிலையில் வைத்திருக்க முக்கியமாக செய்ய வேண்டியதே, உங்களது கடன் தொகைகளை சரியான காலத்தில் வங்கியில் செலுத்துவது தான்.

டிப் 3 - இணை விண்ணப்பதாரரை தேடவும்;

டிப் 3 - இணை விண்ணப்பதாரரை தேடவும்;

கார் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, உங்கள் குடும்ப உறுப்பினரையோ அல்லது மனைவி / கணவரை இணை விண்ணப்பதாரராக சேர்த்து கொண்டு கையெழுத்து இட்டு கார் கடனுக்கு விண்ணப்பிக்கவும்.

இப்படி செய்வதினால், உங்களுக்கு கடன் வழங்குவதற்கு, உங்கள் மீதான நம்பிக்கைதன்மை அதிகரிக்கின்றது. இப்படியாக, உங்களுக்கு அதிக கடன் தொகை கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

மேலும், இணை விண்ணப்பதாரருடன் விண்ணப்பிக்கும் போது, நீங்கள் தனியாக விண்ணப்பிப்பதை காட்டிலும் உங்களுக்கு ஏற்ற வட்டி தொகைகான தேர்வுகளும் அதிக அளவில் கிடைக்கும்.

டிப் 4 - கடன் தொகையுடன் ஆக்சஸரீஸ்களை இணைக்கவும்;

டிப் 4 - கடன் தொகையுடன் ஆக்சஸரீஸ்களை இணைக்கவும்;

சில கடன் வழங்குநர்கள், காருடன் சேர்த்து உங்களின் கார் ஆக்சஸரீஸ்களுக்கு ஃபைனான்ஸ் செய்கின்றனர். ஏனெனில், சிலர் தேர்வு செய்யும் கார் ஆக்சஸரீஸ்கள், அவர்களின் கார் கடன் அளவை தாண்டி சென்று விட கூடிய வாய்ப்புகள் உள்ளது.

மியூஸிக் சிஸ்டம், சீட் கவர்கள், அல்லாய் வீல்கள் உள்ளிட்ட ஆக்சஸரீஸ்களையும் உங்களின் கார் கடன் தொகையில் சேர்த்து கொள்ளலாம்.

இறுதி கருத்து;

இறுதி கருத்து;

கார் கடன்களுக்கான ஃபைனான்ஸ் பெற திட்டங்கள் இருந்தால், இந்த ஆலோசனைகளை மனதில் வைத்து கொண்டு மீண்டும் உங்கள் கார் தொகைக்கான மறு மதிப்பீடுகளை செய்து கொள்ளவும்.

ஏனேனில், உங்களையும் அறியாமல், நீங்கள் உங்களின் கார் கடன் தொகையில் சேர்க்க நினைத்திருந்த ஏதாவது முக்கியமான விஷயங்களும் விட்டு போயிருக்கலாம்.

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

English summary
A company based in Delhi named IndiaLends, connects customers looking for low rate loans with institutional lenders. They also are providing tips and simple steps for getting finance for a new car. IndiaLends.com is headed by Gaurav Chopra, who is also the Founder of this establishment.
Story first published: Tuesday, December 22, 2015, 17:02 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark