ரூ.8.59 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

By Saravana

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி டெல்லியில் நடந்த விழாவில் சிறிது நேரத்திற்கு முன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இரண்டு டீசல் மற்றும் ஒரு பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் மாடல்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரின் விலை உள்ளிட்ட முக்கிய விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

முக்கிய பாதுகாப்பு அம்சங்கள்

முக்கிய பாதுகாப்பு அம்சங்கள்

அனைத்து வேரியண்ட்டுகளிலும் இபிடி., தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக வழங்கப்பட்டிருக்கிறது. மிட் வேரியண்ட்டுகளில் டியூவல் ஏர்பேக்ஸ் மற்றும் டாப் வேரியண்ட்டுகளில் சைடு மற்றும் கர்டெயின் ஏர்பேக்ஸ் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கிறது.

டீசல் மாடல்கள்

டீசல் மாடல்கள்

இரண்டு எஞ்சின் ஆப்ஷன்களில் டீசல் மாடல் வந்துள்ளது. அதிகபட்சமாக 128 பிஎஸ் பவரையும், 259 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.6 லிட்டர் சிஆர்டிஐ டீசல் எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும். மற்றொரு டீசல் மாடலில் 90 பிஎஸ் பவரையும், 220என்எம் டார்க்கையும் அதிகபட்சமாக வெளிப்படுத்தக்கூடிய 1.4 லிட்டர் சிஆர்டிஐ டீசல் எஞ்சின் இடம்பெற்றிருக்கிறது.

பெட்ரோல் மாடல்

பெட்ரோல் மாடல்

பெட்ரோல் மாடலில் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும், 155 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. பெட்ரோல் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடலில் மட்டுமே கிடைக்கும்.

மைலேஜ்

மைலேஜ்

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் 1.6 லிட்டர் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 15.2 கிமீ மைலேஜையும், 1.4 லிட்டர் டீசல் மாடல் லிட்டருக்கு 21.38 கிமீ மைலேஜையும், 1.6 லிட்டர் டீசல் மாடலின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 19.67 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 17.01 கிமீ மைலேஜையும் தரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

சென்ட்ரல் லாக்கிங், 1 டின் மியூசிக் சிஸ்டம், 16 இன்ச் வீல்கள், ஃபோல்டபிள் கீ ஆகியவை நிரந்தர அம்சங்களாக இருக்கின்றன. உயர்வகை வேரியண்ட்டுகலில் 17 இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல்கள், புரொஜெக்டர் ஹெட்லைட், லெதர் இருக்கைகள், ஆடியோ- வீடியோ நேவிகேஷன், 6 ஏர்பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்ற பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்று உள்ளன.

பெட்ரோல் மாடல் விலை விபரம்

பெட்ரோல் மாடல் விலை விபரம்

1.6 லி பேஸ் மாடல்: ரூ.8.59 லட்சம்

1.6 லி எஸ் வேரியண்ட்: ரூ.9.57 லட்சம்

1.6 லி எஸ்எக்ஸ் ப்ளஸ்: ரூ.11.18 லட்சம்

டீசல் விலை விபரம்

டீசல் விலை விபரம்

1.4 லிட்டர் டீசல் எஞ்சின்

1.4 லி பேஸ் மாடல்: ரூ.9.47 லட்சம்

1.4 லி எஸ் வேரியண்ட்: ரூ.10.42 லட்சம்

1.4 லி எஸ் ப்ளஸ்: ரூ.11.45 லட்சம்

1.6 லிட்டர் டீசல் மாடல்

1.6 லி டீசல் எஸ்எக்ஸ் [மேனுவல்]: ரூ.11.60 லட்சம்

1.6 லி டீசல் எஸ்எக்ஸ் ப்ளஸ் [மேனுவல்]: ரூ.12.58 லட்சம்

1.6 லி டீசல் எஸ்எக்ஸ் ஆப்ஷனல் [மேனுவல்]: ரூ.13.60 லட்சம்

1.6 லி டீசல் எஸ்எக்ஸ் ப்ளஸ் [ஆட்டோமேட்டிக்]: ரூ.13.58 லட்சம்

அனைத்தும் விலைகளும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டது.

Most Read Articles
English summary
Hyundai India has launched its all-new compact SUV for global markets and have christened it as ‘Creta'. The name has been derived from the word 'creation' and is designed along their Fluidic 2.0 design philosophy.
Story first published: Tuesday, July 21, 2015, 15:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X