10,000 முன்பதிவுகளை அள்ளிய புதிய ஹூண்டாய் க்ரெட்டா... ஷாக்காகி நிற்கும் டஸ்ட்டர்!

Written By:

விற்பனைக்கு முறைப்படி அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாகவே 10,000க்கும் அதிகமான முன்பதிவுகளை அள்ளியிருக்கிறது புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி. இது டஸ்ட்டர் உள்ளிட்ட போட்டியாளர்களின் வயிற்றில் புளியை கரைக்கும் செய்தியாக அமைந்துள்ளது.

மேலும், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி மார்க்கெட்டில் பெரிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தும் என்று இதன் மூலம் தெரிய வருகிறது. ஏனெனில், விலை விபரம் வெளியிடப்பட்டால், இந்த முன்பதிவு எண்ணிக்கை இன்னும் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிசைன்

டிசைன்

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புளூயிடிக் 2.0 டிசைன் தாத்பரியத்தில் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடல் டிசைன் செய்யப்பட்டுள்ளது. பிற ஹூண்டாய் கார்களை போன்றே இதன் டிசைன் வாடிக்கையாளர்களிடத்தில் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருப்பதாகவே கருதப்படுகிறது.

முதலீடு

முதலீடு

ரூ.1,000 கோடி முதலீட்டில் இந்த புதிய எஸ்யூவி மாடலை ஹூண்டாய் மோட்டார்ஸ் உருவாக்கியிருக்கிறது. ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தாயகமான தென்கொரியாவில் இந்த புதிய மாடல் வடிவமைக்கப்பட்டது. சென்னை மற்றும் ஹைதராபாத்திலுள்ள ஹூண்டாய் டிசைன் பிரிவு பொறியாளர்களின் ஆலோசனைகளின்படி, இந்தியாவுக்கு ஏற்ப டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

இருக்கை வசதி

இருக்கை வசதி

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்று அல்லாமல், இது ரெனோ டஸ்ட்டர் போன்று 4 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எனவே, பின் இருக்கையில் அதிக இடவசதி கொண்டதாகவும், 3 பேர் தாராளமாக அமர்ந்து செல்ல ஏதுவாக இருக்கும்.

இன்டிரியர்

இன்டிரியர்

இன்டிரியர் மிகவும் பிரியமாக இருக்கும் என்பதுடன், ஏராளமான சிறப்பம்சங்களுடன் வருகிறது. இதுவும் வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்ட காரணமாகியிருக்கிறது.

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

பெட்ரோல் மாடலில் 124 பிஎச்பி பவரையும், 151 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.6 லிட்டர் எஞ்சின் கொண்டதாக வருகிறது. இந்த எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும். டீசல் மாடல் இருவிதமான எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். 89 பிஎச்பி பவரையும், 220 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல் ஒன்று. மற்றொரு டீசல் மாடலில் 131 பிஎச்பி பவரையும், 260என்எம் டார்க்கையும் வழங்கும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இரண்டு மாடல்களிலும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது.

 பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தரமான பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கிறது. பேஸ் மாடல் மற்றும் எஸ் வேரியண்ட்டுகளை தவிர்த்து பிற அனைத்து வேரியண்ட்டுகளிலும் டியூவல் ஏர்பேக்ஸ் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கிறது. எஸ்எக்ஸ் ஆப்ஷனல் என்ற டாப் வேரியண்ட்டில் சைடு மற்றும் கர்டெயின் ஏர்பேக்ஸ் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக உள்ளது. மேலும், டாப் வேரியண்ட்டில் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளன. இந்த வேரியண்ட் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலிலும் மட்டும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

முன்பதிவு

முன்பதிவு

இதுவரை 28,500 பேர் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு விசாரணை செய்துள்ளனர். அதில், 10,000 பேர் முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்துவிட்டனர். அடுத்த வாரம் விற்பனைக்கு வருவதற்கு முன்னரே இந்த எண்ணிக்கை இன்னும் உயரும். எனவே, கணிசமான முன்பதிவுடன் கெத்தாக மார்க்கெட்டில் களமிறங்குகிறது புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி.

 
English summary
South Korean car maker Hyundai motors said it has received over 10,000 pre-bookings for its upcoming mass market sports utility vehicle Creta, which is all set to debut in India next week.
Story first published: Thursday, July 16, 2015, 9:49 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark