ஹூண்டாய் ஐ20 க்ராஸ்ஓவர் காரின் அதிகாரப்பூர்வ ஸ்கெட்ச் படங்கள்!

Written By:

ஹூண்டாய் எலைட் ஐ20 கார் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்தநிலையில், எலைட் ஐ20 காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் க்ராஸ்ஓவர் மாடலும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

ஏராளமான ஸ்பை படங்கள் மற்றும் மாதிரி படங்கள் வெளியாகி வந்த நிலையில், முதல்முறையாக இந்த காரின் அதிகாரப்பூர்வ ஸ்கெட்ச் படங்களை ஹூண்டாய் மோட்டார்ஸ் வெளியிட்டிருக்கிறது.

Hyundai i20 Active
 

ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய கார் மாடல் புளூயிடிக் 2.0 டிசைன் தாத்பரியத்தில், ஜெர்மனியில் இருக்கும் ஹூண்டாய் நிறுவனத்தின் ஐரோப்பிய டிசைன் மையத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூடுதல் அளவு கொண்ட பெரிய அலாய் வீல்கள், பிளாஸ்டிக் பாடி கிளாடிங்குகள், ரூஃப் ரெயில் என பல்வேறு ஆக்சஸெரீகள் மூலம் இந்த காரின் தோற்றம் எஸ்யூவி தோற்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வீல் பேஸும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

Hyundai i20 Active 2
 

ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் காரின் எஞ்சின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், எலைட் ஐ20 காரின் எஞ்சின் ஆப்ஷன்களிலேயே இந்த கார் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.

English summary
South Korean car maker Hyundai motors has officially released the design sketches of new crossover model, To be called the i20 Active, the vehicle has been designed at Hyundai Motor's Design Centre Europe in Russelsheim, Germany, says the company.
Story first published: Wednesday, February 25, 2015, 12:07 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark