வரும் 17ந் தேதி ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் விற்பனைக்கு வருகிறது!

Written By:

வரும் 17ந் தேதி புதிய ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கார் விற்பனைக்கு வருகிறது. கடந்த ஆண்டு விற்பனைக்கு வந்த எலைட் ஐ20 ஹேட்ச்பேக் காரில் மாற்றங்களை செய்து க்ராஸ்ஓவர் மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் இருக்கும் அதே எஞ்சின் ஆப்ஷன்களுடன் இந்த புதிய கார் மாடல் விற்பனைக்கு வர இருக்கிறது. புதிய பம்பர், அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், ஸ்கிட் பிளேட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் பாடி கிளாடிங்குகள் கொண்டதாக இருப்பதால் தோற்றத்தில் வேறுபடுகிறது.

Hyundai i20 Active
 

ஃபோக்ஸ்வேகன் க்ராஸ்போலோ, டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ், ஃபியட் அவென்ச்சுரா போன்ற க்ராஸ்ஓவர் மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும். ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் இந்த புதிய காரை ஹூண்டாய் மோட்டார்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
South-Korean automobile manufacturer will be launching its i20 Active in India. The crossover will be make its global debut on 17th March, 2015. It will be followed by regional launches thereafter. This vehicle has been spied several times on Indian roads and will be finally launched.
Story first published: Monday, March 9, 2015, 10:00 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark