இங்கிலாந்தில், புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கூபே காரின் விலை விபரம்!

இங்கிலாந்தில் விற்பனைக்கு வர இருக்கும் ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் கூபே மாடலுக்கான விலை விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் கூபே மாடலாக இந்த கார் இங்கிலாந்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. அடுத்த மாதம் 26ந் தேதி அங்கு முறைப்படி விற்பனைக்கு வருகிறது புதிய ஐ20 கூபே கார்.


 மூன்று வேரியண்ட்டுகள்

மூன்று வேரியண்ட்டுகள்

இந்த புதிய ஐ20 கூபே கார் எஸ்இ, ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் நவ் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் அங்கு விற்பனைக்கு வர இருக்கிறது.

பேஸ் மாடல் வசதிகள்

பேஸ் மாடல் வசதிகள்

பேஸ் மாடலில் 16 இஞ்ச் அலாய் வீல்கள், புளூடூத் வசதி, க்ரூஸ் கன்ட்ரோல், ரியர் பார்க்கிங் சென்சார், ரியர் ஸ்பாய்லர் ஆகியவை நிரந்தர ஆக்சஸெரீகளாக இடம்பெற்றிருக்கிறது.

 மிட் வேரியண்ட்

மிட் வேரியண்ட்

நடுத்தர வகை ஸ்போர்ட் வேரியண்ட்டில் 17 இஞ்ச் அலாய் வீல்கள், ஆட்டோமேட்டிக் லைட்ஸ், ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ கண்ணாடி, க்ளைமேட் கன்ட்ரோல், ஆட்டோ டீஃபாக், பிரைவசி க்ளாஸ் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கும்.

டாப் வேரியண்ட்

டாப் வேரியண்ட்

ஸ்போர்ட் நவ் டாப் வேரியண்ட்டில் சாட்டிலைட் நேவிகேஷன், 7 இஞ்ச் டச் ஸ்கிரீன், ரியர் வியூ கேமரா, டிஏபி ரேடியோ போன்ற வசதிகள் இருக்கும்.

 எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

புதிய ஐ20 கூபே கார் 84 பிஎஸ் பவரை அளிக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 90 பிஎஸ் பவரை அளிக்கும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வர இருக்கிறது. பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், டீசல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும் கொண்டதாக கிடைக்கும்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

ஜெர்மனியில் உள்ள ஹூண்டாய் வடிவமைப்பு மையத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கார் துருக்கியிலுள்ள ஹூண்டாய் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை

விலை

இங்கிலாந்தில் 12,725 பவுண்ட் விலை முதல் 16,400 பவுண்ட் வரையிலான ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது.

Most Read Articles
English summary
Hyundai Motor UK has announced the official pricing and specification for the New Generation i20 Coupe. 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X