பிப்.16ல் புதுப்பொலிவுடன் விற்பனைக்கு வரும் புதிய ஹூண்டாய் வெர்னா கார்!

Written By:

அடுத்த மாதம் 16ந் தேதி இந்தியாவில் ஹூண்டாய் வெர்னாவின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

கடந்த 2011ம் ஆண்டு புளூயிடிக் டிசைனில் வடிவமைக்கப்பட்ட ஹூண்டாய் வெர்னா கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. டிசைனில் மிகவும் கவர்ச்சியான மிட்சைஸ் கார் என்ற பெருமையுடன் விற்பனையிலும் ஹூண்டாய் நிறுவனத்துக்கு பக்கபலமாக இருந்து வருகிறது.

 

இந்த நிலையில், ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் கார்களால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை போக்கிக்கொள்ளும் விதத்தில், வெர்னா காருக்கு புதுப்பொலிவு கொடுத்து விற்பனைக்கு கொண்டு வருகிறது ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம்.

ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் சோலரிஸ் என்ற பெயரில் விற்பனைக்கு வந்திருக்கும் புதிய வெர்னா மாடல்தான் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. எனவே, அதே டிசைன் மாற்றங்களை இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம்.

புதிய ஹெட்லைட் டிசைன், கிரில், பகல் நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் போன்றவை வெளிப்புறத்தின் புதிய அம்சங்களாக இருக்கும். மேம்படுத்தப்பட்ட பவர் ஸ்டீயரிங் கொண்டதாக வருகிறது. பாகங்களின் தரமும் மேம்படுத்தப்பட்டிருக்கும். அதேவேளை, எஞ்சினில் மாற்றங்கள் இருக்காது.

ஒப்பீடு

ஹூண்டாய் இயான்
ஒப்பீடுக்கான ஹூண்டாய் இயான்வேரியண்ட் தேர்வு
-- மற்றொரு கார் தேர்வு --
English summary
South Korean car maker Hyundai motors will launch Verna facelift model in India, on February 16.
Story first published: Saturday, January 17, 2015, 10:26 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos