ஹூண்டாய் கார்களின் விலை கணிசமாக உயர்ந்தது

Written By:

அனைத்து கார் மாடல்களின் விலையையும் கணிசமாக உயர்த்தியிருக்கிறது ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம்.

இயான் முதல் சான்டாஃ பீ எஸ்யூவி வரையிலான அனைத்து மாடல்களின் விலையும் உயர்த்தப்பட்டிருக்கிறது. மாடலுக்கு தகுந்தவாறு ரூ.15,000 முதல் ரூ.1.27 லட்சம் வரை விலை உயர்வு செய்யப்பட்டிருப்பதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hyundai Eon
 

வரிச்சலுகை ரத்து மற்றும் உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் விலையை உயர்த்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1ந் தேதி முதல் இந்த விலை உயர்வு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜனவரி 1 முதல் கார் முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த விலை பொருந்தும்.

English summary
Hyundai Motor India Ltd. (HMIL), the country’s largest passenger car exporter and second largest car manufacturer announced the price increase across all its models with immediate effect.
Story first published: Wednesday, January 7, 2015, 10:43 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark