உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு 94 கார்களை வழங்கும் ஹூண்டாய்!

Written By:

வரும் 14ந் தேதி முதல் அடுத்த மாதம் 29ந் தேதி வரை உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற இருக்கிறது.

இந்த முறை உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவின் அதிகாரப்பூர்வ கார் ஸ்பான்சராக ஹூண்டாய் மோட்டார்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.

  

இதன்மூலம், அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்டோரை அழைத்துச் செல்லும் பணிகளுக்கான கார் மற்றும் மினி வேன்களை ஹூண்டாய் நிறுவனம் வழங்க உள்ளது.

இதற்காக, 94 கார்கள் மற்றும் வேன்களை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நியூசிலாந்து பிரிவு போட்டி அமைப்பாளர்களிடம் சமீபத்தில் ஒப்படைத்தது. இதில், சான்டா ஃபீ எஸ்யூவி, ஐஎக்ஸ்35 கார், ஐமேக்ஸ் வேன், ஐ40 வேகன் உள்ளிட்ட வாகனங்கள் அடங்கும்.

மேலும், நியூசிலாந்தில் ஹூண்டாய் கார்களை டெஸ்ட் டிரைவ் செய்பவர்களுக்கு, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியை காண்பதற்கான டிக்கெட்டை குலுக்கல் முறையில் பரிசாக பெறுவதற்கான போட்டி ஒன்றையும் நடத்தி வருகிறது.

English summary
Hyundai, the South Korean carmaker, being the official automotive partner of the ICC Cricket World Cup 2015, which is due to take place shortly, has provided a 94 vehicle fleet to be used during the ICC Cricket World Cup 2015.
Story first published: Wednesday, February 11, 2015, 16:40 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark