ஹூண்டாய் சான்டா க்ரூஸ் கிராஸ்ஓவர் பிக்கப் டிரக் கான்செப்ட்!

By Saravana

டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய பிக்கப் டிரக் கான்செப்ட் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. புதிய செக்மென்ட்டில் ஹூண்டாய் நிறுவனத்தின் கவனம் திரும்பியிருப்பது இந்த புதிய பிக்கப் டிரக்கின் மூலம் வெளிப்பட்டுள்ளது.

சான்டா க்ரூஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய பிக்கப் டிரக் கான்செப்ட் டிசைன் காண்போரை கவர்ந்திழுத்து வருகிறது. சாகச பிரியர்களை ஈர்க்கும் வகையில், இந்த புதிய பிக்கப் டிரக் கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


நோக்கம்

நோக்கம்

நகர்ப்புற சாகச பிரியர்களை இலக்காக வைத்து இந்த புதிய பிக்கப் டிரக் கான்செப்ட்டை உருவாக்கியிருப்பதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. நகர்ப்புற சாலைகளிலும், வார இறுதி வெளியூர் பயணங்களுக்கும் ஏற்றதாக இந்த பிக்கப் டிரக்கை வடிவமைத்திருப்பதாக ஹூண்டாய் தெரிவிக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய பிக்கப் டிரக் கான்செப்ட்டில் 190 எச்பி பவரையும், 407 என்எம் டார்க்கையும் வழங்கும் 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் உள்ளது.

 இருக்ககை வசதி

இருக்ககை வசதி

4 கதவுகள் கொண்ட இந்த புதிய பிக்கப் டிரக் மாடலில் சரக்கு வைப்பதற்கான பெட் மற்றும் இரண்டு வரிசை இருக்கைகள் உள்ளன. இதில், 5 பேர் பயணிக்க முடியும்.

எரிபொருள் சிக்கனம்

எரிபொருள் சிக்கனம்

100 கிமீ செல்வதற்கு 6.2 லிட்டர் டீசல் தேவைப்படும் என ஹூண்டாய் தெரிவித்துள்ளது. இந்த பிக்கப் டிரக்கில் மிச்செலின் நிறுவனத்தின் பிரத்யேக டிசைன் கொண்ட டயர்கள், அதிக விட்டமுடைய வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

உற்பத்திக்கு செல்லுமா?

உற்பத்திக்கு செல்லுமா?

இந்த புதிய பிக்கப் டிரக் உற்பத்தி நிலைக்கு செல்லுமா என்பது குறித்து ஹூண்டாய் தெரிவிக்கவில்லை. ஆனால், இதனை செடான் அல்லது யுட்டிலிட்டி ரக கார்களை விரும்புவர்களுக்கு மாற்றான மாடலாக நிலைநிறுத்துவதற்கான திட்டத்தை ஹூண்டாய் ஆய்வு செய்து வருவதாக தெரிகிறது.

Most Read Articles
English summary
Hyundai Motor Company, the fastest-growing automaker by brand, today staged a world premiere of Santa Cruz crossover truck concept at the 2015 Detroit International Auto Show.
Story first published: Wednesday, January 14, 2015, 19:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X