புதுப்பொலிவுடன் வரும் புதிய ஹூண்டாய் வெர்னாவுக்கு முன்பதிவு துவங்கியது

Written By:

புதுப்பொலிவுடன் வரும் புதிய ஹூண்டாய் வெர்னா காருக்கு பல டீலர்களில் முன்பதிவு துவங்கப்பட்டிருக்கிறது.

புதிய ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் கார்களால் ஹூண்டாய் வெர்னாவுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதனை போக்கிக்கொள்ளும் விதத்தில் வெர்னாவுக்கு புதுப்பொலிவு கொடுத்திருக்கிறது ஹூண்டாய் நிறுவனம்.

 

வரும் 16ந் தேதி அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய வெர்னா மாடலுக்கு குறிப்பிட்ட டீலர்களில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.

எஞ்சின் ஆப்ஷன்களில் மாற்றங்கள் இருக்காது. தற்போது விற்பனையில் இருக்கும் இரண்டு பெட்ரோல் மற்றும் இரண்டு டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலிலும் விற்பனைக்கு வர உள்ளது. தற்போதைய மாடலைவிட கூடுதல் பிரிமியம் அம்சங்கள் கொண்டதாக இந்த கார் வர இருக்கிறது.

English summary

 The South-Korean manufacturer Hyundai motors is planning of providing a facelift to its Verna sedan. Hyundai will be launching their all new Verna on the 16th of February, 2015. The manufacturer, however, has already commenced the booking of its new vehicles through certain dealerships.
Story first published: Thursday, February 5, 2015, 13:32 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark