தமிழக போலீசார் வாங்கியிருக்கும் நெபுலா ஜாகுவார் ஏடிவி வாகனத்தின் சிறப்பம்சங்கள்!

Posted By:

தமிழக கடலோர பகுதிகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு, ஏடிவி வாகனங்களை தமிழக போலீசார் வாங்கியிருக்கின்றனர். சென்னை மெரீனா மற்றும் எலியட்ஸ் கடற்கரை பகுதிகளில் இந்த வாகனங்கள் முதலில் கண்காணிப்பு மற்றும் மீட்புப்பணிகளில் ஈடுபடுத்துவதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பிற மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில், இந்த ஏடிவி வாகனங்களை விரைவில் சேவைக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. கடற்கரை பகுதிகளின் கண்காணிப்பை பலப்படுத்துவதற்காக தமிழக போலீசார் வாங்கியிருக்கும் நெபுலா ஜாகுவார் 500 ஏடிவி வாகனத்தின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

01. ஏடிவி வாகனம்

01. ஏடிவி வாகனம்

அனைத்து விதமான நிலை அமைப்புகளிலும் செல்லும் சிறப்பம்சங்களை இந்த ஏடிவி வாகனங்கள் பெற்றிருக்கின்றன. சேறு, சகதி, மணல், மலை, சமவெளிப் பகுதி என எந்தவொரு நிலை அமைப்பிலும் இந்த வாகனங்கள் தங்கு தடை இல்லாமல் செல்லும்.

02. நெபுலா நிறுவனம்

02. நெபுலா நிறுவனம்

ஏடிவி வாகன விற்பனையில் சில நிறுவனங்களே ஈடுபட்டுள்ளன. அதில், புனேயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நெபுலா நிறுவனத்தின் ஜாகுவார் 500 என்ற மாடலைத்தான் தமிழக போலீசார் வாங்கியுள்ளனர். இந்த நெபுலா ஜாகுவார் 500 மாடலின் சிறப்புகளை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

03. வடிவம்

03. வடிவம்

நெபுலா ஜாகுவார் 500 மாடல் 89 இன்ச் நீளமும், 45 இன்ச் அகலமும், 47 இன்ச் உயரமும் கொண்டது. வாகனத்தின் மொத்த எடை 455 கிலோ.

04. எஞ்சின் விபரம்

04. எஞ்சின் விபரம்

இந்த ஏடிவி வாகனத்தில் 32.2 எச்பி பவரையும், 40 என்எம் டார்க்கையும் அதிகபட்சமாக வழங்கும் 498.6சிசி வாட்டர் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது ரிவர்ஸ் கியருடன் கூடிய சிவிடி வகை கியர்பாக்ஸ் கொண்டது. 4 வீல் டிரைவ் சிஸ்டம் இருப்பதால், கரடுமுரடான சாலைகளில் எளிதாக இயக்க முடியும்.

 05. சஸ்பென்ஷன்

05. சஸ்பென்ஷன்

முன்புறத்தில் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய இன்டிபென்டன்ட் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் ஹெவி ட்யூட்டி ரியர் ஸ்விங்க் ஆர்ம் கொண்ட அட்ஜெஸ்ட்டபிள் ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளது.

06. பிரேக் சிஸ்டம்

06. பிரேக் சிஸ்டம்

முன்புறத்திலும், பின்புறத்திலும் டிஸ்க் பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு 75 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. ஆனால், அதிகபட்சமாக 65 கிமீ வேகம் வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் டேங்க்

பெட்ரோல் டேங்க்

இந்த வாகனத்தில் 10.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் இருக்கிறது.

பயன்பாடு

பயன்பாடு

கடற்கரையோர கண்காணிப்பு மற்றும் மீட்புப்பணிகளில் இந்த வாகனம் பயன்படுத்தப்பட உள்ளது.

 கூடுதல் ஆக்சஸெரீகள்

கூடுதல் ஆக்சஸெரீகள்

வின்ச், விண்ட்ஸ்கிரீன், டோயிங் ஹிட்ச், எக்ஸ்ட்ரா ஃபுட் பேட், ஹேண்டில்பார், சீட்பேக் போன்றவற்றை கூடுதலாக பொருத்திக் கொள்ள முடியும்.

 
English summary
Tamilnadu police is all set to deploy Nebula Jaguar 500 ATVs for patrolling purposes in seashore areas soon.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark