மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடல் அறிமுகம்!

Written By:

புதிய தலைமுறை மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவியி தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய எஸ்யூவி டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.

புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவியில் நிகழ்ந்திருக்கும் தலைமுறை மாற்றங்கள் மற்றும் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

அடிப்படை மாடல்

அடிப்படை மாடல்

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மிட்சுபிஷியின் டிரைட்டான்/எல்200 பிக்கப் டிரக் அடிப்படையில் இந்த புதிய தலைமுறை பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

புதிய மாடல்

புதிய மாடல்

கடந்த ஏழு ஆண்டுகளாக பல்வேறு நாடுகளில் விற்பனையில் இருந்து வரும் பஜேரோ ஸ்போர்ட் மாடலுக்கு மாற்றாக இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. சில மார்க்கெட்டுகளில் சேலஞ்சர் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போதைய மாடல் இதுவரை 4 லட்சம் விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்திருக்கிறது.

முதலில் தாய்லாந்து...

முதலில் தாய்லாந்து...

முதலில் தாய்லாந்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, உலக அளவில் 90 நாடுகளில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவியில் 178 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க்கையும் வழங்கும் 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

 பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்டிபியூஷன் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹைட்ராலிக் பிரேக் பூஸ்டர், எஸ்ஆர்எஸ் ஏர்பேக்ஸ், அனைத்து பயணிகளுக்கும் 3 பாயிண்ட் இஎல்ஆர் சீட் பெல்ட்டுகள், முன்புற, பின்புற மற்றும் பக்கவாட்டு மோதல்களை தாங்கக்கூடிய இம்பேக்ட் பார்கள் ஆகியவற்றுடன் வருகிறது.

4 வீல் டிரைவ் சிஸ்டம்

4 வீல் டிரைவ் சிஸ்டம்

புதிய மாடல் 2 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக வர இருக்கிறது.

 அசெம்பிள்

அசெம்பிள்

திருவள்ளூரிலுள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில் இந்த புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனைக்கு செல்ல இருக்கிறது.

இந்தியாவுக்கு...

இந்தியாவுக்கு...

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ வழியாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
English summary
India Bound New Gen Mitsubishi Pajero Sport Revealed In Thailand.
Story first published: Thursday, August 6, 2015, 8:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark