விற்பனையில் மிக மோசமான இந்தியாவின் அந்த 10 கார்கள்!

By Saravana

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் இந்திய கார் மார்க்கெட்டில் பல கார் நிறுவனங்கள் போட்டி போட்டு தயாரிப்புகளை விற்பனை செய்து வருகின்றன. பல கார் மாடல்கள் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளையும் விஞ்சிய விற்பனை பங்களிப்பை வழங்கி வருகின்றன.

அதற்கு பல்வேறு காரணங்களை கூற முடியும். அதேநேரத்தில், மிக வேகமாக வளர்ந்து வரும் நமது நாட்டு கார் சந்தையில், சில கார் மாடல்கள் மிக மோசமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன.

அதில், நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு காலமான ஜூலை முதல் செப்டம்பர் வரையில், விற்பனையில் மிக மோசமான நிலையை பெற்றிருக்கும், ரூ.15 லட்சத்திற்கும் குறைவான எக்ஸ்ஷோரூம் விலை கொண்ட அந்த 10 கார் மாடல்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

 10. ரெனோ ஃப்ளூயன்ஸ்

10. ரெனோ ஃப்ளூயன்ஸ்

நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு காலத்தில், வெறும் 30 ரெனோ ஃப்ளூயன்ஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. அதாவது, மாதத்திற்கு சராசரியாக வெறும் 10 கார்கள் மட்டுமே விற்பனையாகின்றது. போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, இதன் தோற்றமும், இதன் விலையும் கவர்ச்சிகரமாக இல்லை.

 09. ஃபோர்டு ஃபியஸ்ட்டா

09. ஃபோர்டு ஃபியஸ்ட்டா

ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான மூன்று மாத காலத்தில் வெறும் 39 ஃபோர்டு ஃபியஸ்ட்டா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா போன்ற ஆணழகன்களுக்கு மத்தியில் ஃபோர்டு ஃபியஸ்ட்டா காரால் ஈடுகொடுக்க முடியவில்லை. கடந்த நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டுடன் ஒப்பிடும்போது, ஃபோர்டு ஃபியஸ்ட்டா விற்பனை 88 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

08. ரெனோ ஸ்காலா

08. ரெனோ ஸ்காலா

நிசான் சன்னி செடான் காரின் ரீபேட்ஜ் மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட ரெனோ ஸ்காலா, தொடக்கம் முதலே எதிர்பார்த்த விற்பனை வளர்ச்சியை பெற முடியாமல் தவிர்க்கிறது. கடந்த மூன்று மாதங்களில் வெறும் 119 ஸ்காலா கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. அதிக விலை, கவர்ச்சியில்லா தோற்றம் ஆகியவை இந்த காருக்கான கவர்ச்சியை குறைத்துவிட்டது.

07. செவர்லே க்ரூஸ்

07. செவர்லே க்ரூஸ்

கடந்த மூன்று மாத காலத்தில் வெறும் 143 செவர்லே க்ரூஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. சிறப்பான தோற்றமும், செயல்திறனும் கொண்ட இந்த காருக்கு வலு சேர்த்தாலும், செவர்லே நிறுவனத்தின் சர்வீஸ் நெட்வொர்க், நம்பகத்தன்மை குறைவான நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்களின் பார்வை போன்றவை இந்த காரின் விற்பனையை பின்தங்க செய்திருக்கிறது.

06. மஹிந்திரா வைப்

06. மஹிந்திரா வைப்

மஹிந்திரா வெரிட்டோ காரின் நாட்ச்பேக் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், மிக அவலட்சமான இதன் தோற்றம், வாடிக்கையாளர்களை கவரவில்லை. அறிமுகமானது முதலே, வரவேற்பு இல்லாத இந்த மாடலை மஹிந்திரா தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது. கடந்த மூன்று மாத காலத்தில் 206 மஹிந்திரா வெரிட்டோ கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்த எண்ணிக்கையும் டாக்சி மார்க்கெட்டிலிருந்து வந்திருக்கும் என்று கருதலாம்.

05. ரெனோ பல்ஸ்

05. ரெனோ பல்ஸ்

நிசான் மைக்ரா காரின் ரீபேட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட ரெனோ பல்ஸ் கார் ஆரம்பம் முதலே தடுமாறி வருகிறது. கடந்த மூன்று மாத காலத்தில் வெறும் 279 ரெனோ பல்ஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. அனைத்து விதங்களிலும் இதைவிட சிறப்பான தோற்றம், வசதிகள் கொண்ட மாடல்கள் பெருகிவிட்டதும், இந்த காரை பின்தங்க செய்துவிட்டது.

04. செவர்லே செயில் யுவா

04. செவர்லே செயில் யுவா

மாருதி ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட மாடல். ஸ்விஃப்ட் காரில் இருக்கும் அதே ஃபியட் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின்தான் இந்த காரிலும் இருக்கிறது. ஆனாலும், இதன் தோற்றமும், செவர்லே மீதான நம்பகத்தன்மையும் வாடிக்கையாளர்களை தூரவே வைத்திருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் வெறும் 349 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருக்கின்றன.

03. ஃபியட் லீனியா

03. ஃபியட் லீனியா

மிகச்சிறப்பான கார் மாடலாக இருந்தாலும், ஃபியட் நிறுவனத்தின் கட்டமைப்பு வசதிகள், விற்பனைக்கு பிந்தைய சேவை போன்றவை இந்த கார் மீதான ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. அதேநேரத்தில், கார் காதலர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பல சிறப்பம்சங்களை கொண்ட மாடல். கடந்த மூன்று மாத காலத்தில் 371 லீனியா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. மேலும், கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில், தற்போது விற்பனை 10 சதவீதம் உயர்ந்திருப்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

02. ஹூண்டாய் எலான்ட்ரா

02. ஹூண்டாய் எலான்ட்ரா

மிகச்சிறப்பான தோற்றம் கொண்ட கார் மாடல்களில் ஒன்று ஹூண்டாய் எலான்ட்ரா. ஆனாலும், போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல், இந்த பட்டியலில் சேர்ந்து நிற்கிறது. கடந்த மூன்று மாதங்களில் 399 எலான்ட்ரா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

01. நிசான் சன்னி

01. நிசான் சன்னி

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் அறிமுகம் செய்யப்பட்ட நிசான் சன்னி காரின் விற்பனை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. மிட்சைஸ் கார் செக்மென்ட்டில் மிக தாராள இடவசதி கொண்ட மாடலாக இருந்தும், தோற்றம், நிசான் நிறுவனத்தின் சர்வீஸ் கட்டமைப்பு வசதிகள் போன்றவை இந்த காரின் விற்பனையை மோசமாக்கி வருகிறது. நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வெறும் 461 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.

Most Read Articles
English summary
India's 10 worst selling cars in Q2 FY16.
Story first published: Friday, October 30, 2015, 12:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X