இயற்கை எரிவாயுவில் இயங்கும் இந்தியாவின் முதல் ரயில்!

Posted By:

சிஎன்ஜி எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கும் இந்தியாவின் முதல் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ரயிலை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கொடியசைத்து துவங்கி வைத்தார்.

ஹரியானா மாநிலம், ரேவரி மற்றும் ரோதக் நகரங்களுக்கு இடையில் இந்த புதிய பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. 1400 எச்பி சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்ட இந்த ரயிலின் எஞ்சின் சிஎன்ஜி மற்றும் டீசல் என இரட்டை எரிபொருளில் ஓடும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

CNG Train
 

ரயில் இயங்கும்போது 80 சதவீதம் டீசலிலும், 20 சதவீதம் சிஎன்ஜியிலும் இயக்கப்படும். பின்னர், படிப்படியாக சிஎன்ஜி எரிபொருள் பயன்பாட்டை 50 சதவீதம் வரை அதிகரிக்க ரயில்வேறு துறை முடிவு செய்துள்ளது.

இந்த ரயிலின் இருபுறத்திற்கான பெட்டிகளுடன் இணைந்த எஞ்சின்கள் மற்றும் 6 சேர்கார் பெட்டிகளை சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டவை. டீசல் பயன்பாட்டை குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசுபடுதலை வெகுவாக குறைக்கும் வகையில், இதுபோன்று அதிக ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

English summary
The Indian government, in the process of saving the environment, has taken a massive step towards going green by launching their first CNG powered train.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark