மூன்றாம் நபர் வாகன காப்பீட்டுக்கான பிரிமிய தொகை உயர்கிறது

Written By:

வரும் ஏப்ரல் 1 முதல் மூன்றாம் நபர் வாகன காப்பீட்டுக்கான பிரிமிய தொகையை உயர்த்தி தருவதற்கு தேசிய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம்(IRDA) திட்டமிட்டுளளது.

கடந்த சில ஆண்டுகளாக மூன்றாம் நபர் வாகன காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இழப்பீட்டு தொகை வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால், இந்த துறையில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது.

Vehicle Insurance
 

இதையடுத்து, மூன்றாம் நபர் வாகன காப்பீட்டு திட்டத்திற்கான பிரிமியம் தொகையை உயர்த்தி தருவதற்கு இரிடா முடிவு செய்துள்ளது. இதன்மூலம், வாகன காப்பீடு வழங்கும் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை வெகுவாக குறைக்க முடியும் என்று அந்த அமைப்பு கருதுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் வாகனம் மோதி பாதிக்கப்படும் மூன்றாவது நபர் இழப்பீடு கோர முடியும். இந்த நிலையில், விபத்தின் காரணமாக உயிரிழப்பவர்களுக்கும், நிரந்தர ஊனம் அடைபவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகை வெகுவாக உயர்ந்துள்ளது.

இதனால், ஏற்படும் நஷ்டத்தை காரணம் காட்டி மூன்றாவது நபர் வாகன காப்பீட்டுக்கான பிரிமிய தொகையை உயர்த்த வேண்டும் என்ற காப்பீட்டு நிறுவனங்களின் கோரிக்கைக்கு இரிடா அமைப்பு செவி சாய்த்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே மூன்றாவது நபர் வாகன காப்பீட்டுக்கான பிரிமிய தொகை வெகுவாக அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், வாகன உரிமையாளர்களுக்கு அடுத்து ஒரு கசப்பு மருந்து காத்திருக்கிறது.

English summary
The Insurance Regulatory and Development Authority (IRDA) has proposed a draft to hike the price of third party motor vehicle insurance cover, from the 1st of April 2015.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark