இசுஸு எம்யூ-7 எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுகம்!

Written By:

இசுஸு எம்யூ-7 எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

கடந்த 2013ம் ஆண்டு டிசம்பரில் இசுஸு எம்யூ-7 இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. இதுவரை மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடலில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலுடன் கூடுதல் வசதிகளும் சேர்க்கப்பட்டு வந்துள்ளது.

கூடுதல் சிறப்பம்சங்கள்

கூடுதல் சிறப்பம்சங்கள்

இன்டிரியரில் இரட்டை வண்ணக் கலவை கொண்டதாக ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது. சேட்டிலைட் நேவிகேஷன் வசதியுடன் கூடிய புதிய கென்வுட் 6015பிடி மியூசிக் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார் மர்றும் கேமரா, டச் ஸ்கிரீன் திரை போன்றவை கொடுக்கப்பட்டிருக்கின்றன.

எஞ்சின்

எஞ்சின்

எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. மேனுவல் மாடலில் இருக்கும் அதே 3.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின்தான் பொருத்தப்பட்டு இருக்கிறுத. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 160 பிஎச்பி பவரையும், 330என்எம் டார்க்கையும் வழங்கும். ஏற்கனவே உள்ள 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் இருக்கும் நிலையில், தற்போது ஆட்டோமேட்டிக் மாடலிலும் கிடைக்கும்.

விலை

விலை

ரூ.23.90 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இசுஸு எம்யூ7 எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் மாடலைவிட ரூ.2.5 லட்சம் கூடுதலான விலையில் இந்த புதிய ஆட்டோமேட்டிக் மாடல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

பிரிமியம் எஸ்யூவி மார்க்கெட்டில் இருக்கும் ஜாம்பாவான் மாடல்களுடன் இசுஸு எம்யூ7 போட்டி போடுகிறது. மேலும், எம்யூ-7 எஸ்யூவிக்கு பிரத்யேக வாடிக்கையாளர் வட்டமும் ஏற்பட்டு வருவது கவனித்தக்கது.

 
English summary
Isuzu Motor has launched the MU-7 SUV's automatic transmission-equipped model in the country at Rs. 23.90 lakh (ex-showroom, Delhi).
Story first published: Thursday, July 23, 2015, 9:06 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos