அடுத்து ஒரு கட்டுமஸ்தான எஸ்யூவியை களமிறக்கும் இசுஸு!

Written By:

இந்தியாவில் புதிதாக ஒரு எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு இசுஸு திட்டமிட்டிருக்கிறது. தற்போது எம்யூ7 எஸ்யூவி மாடலையும், டி மேக்ஸ் என்ற பிக்கப் டிரக் மாடலையும் விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், வர்த்தக விரிவாக்கத்தின் அடுத்த படியாக தனது எம்யூ- எக்ஸ் எஸ்யூவி மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு இசுஸு திட்டமிட்டுள்ளது. கட்டுமஸ்தான உடலமைப்பு கொண்ட இந்த புதிய எஸ்யூவி மாடல் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

இறக்குமதி

இறக்குமதி

சோதனை மற்றும் ஆராய்ச்சி பணிகளுக்காக ஏற்கனவே இசுஸு எம்யூ- எக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

 எந்த ரகம்?

எந்த ரகம்?

டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவிகளுக்கு போட்டியாக அதே செக்மென்ட்டில் இந்த புதிய எஸ்யூவி மாடல் நிலைநிறுத்தப்படும்.

எஞ்சின்

எஞ்சின்

இசுஸு எம்யூ- எக்ஸ் எஸ்யூவியில் 134 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் வழங்கும் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது. இப்போது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இல்லை.

எப்போது அறிமுகம்?

எப்போது அறிமுகம்?

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டெல்லி சர்வதேச வாகன கண்காட்சியில் இந்த புதிய இசுஸு எம்யூ எக்ஸ் எஸ்யூவி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள், சோதனைகளை முடிக்க இசுஸு திட்டமிட்டுள்ளது.

எதிர்பார்க்கும் விலை?

எதிர்பார்க்கும் விலை?

ரூ.20 லட்சத்திற்கும் குறைவான விலையில் இந்த புதிய எஸ்யூவி மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
மேலும்... #இசுஸு #isuzu #auto news
English summary
Isuzu Motors has recently entered the Indian market with a selected offering. They currently offer a single SUV in their passenger vehicle segment, MU-7 is their premium offering in India.
Story first published: Wednesday, April 8, 2015, 11:33 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark