எலக்ட்ரிக் கார் தயாரிக்க ஜாகுவார் லேண்ட்ரோவர் திட்டம்!

Written By:

மின்சாரத்தில் இயங்கும் புதிய கார் மாடலை தயாரிக்க டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்படும் ஜாகுவார் லேண்ட்ரோவர்(JLR) திட்டமிட்டுள்ளது.

ஆஸ்திரியாவில் இருக்கும் ஆலையில் புதிய உற்பத்தி பிரிவில் இந்த புதிய எலக்ட்ரிக் காரை தயாரிப்பதற்கும் அந்த நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Jaguar Landrover Models
 

ஐரோப்பிய மாசுக்கட்டுப்பாட்டு அம்சத்திற்கு ஒத்துப் போவதற்கு ஏதுவாக ஹைபிரிட் அல்லது முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் காரை வெளியிட அந்த நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரியாவில் உள்ள ஆலையில் ஆண்டுக்கு 10,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக புதிய உற்பத்தி பிரிவை அமைக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்மூலம், பிஎம்டபிள்யூ, தெஸ்லா உள்ளிட்ட கார் நிறுவனங்களுடன் போட்டி போட ஏதுவாகும் என்பதுடன், தனது எதிர்கால வர்த்தகத்திற்கு இந்த புதிய எலக்ட்ரிக் கார் மாடல் மற்றும் தொழில்நுட்பம் நிச்சயம் பெரிய அளவில் வலு சேர்க்கும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது.

English summary
Tata owned Jaguar Land Rover is planning production of electric vehicles in Austria.
Story first published: Tuesday, March 10, 2015, 15:26 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark