ரிமோட் கன்ட்ரோலில் இயங்கும் ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி!

Written By:

ரிமோட் கன்ட்ரோலில் இயங்கும் ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி மாடல் ஒன்றை ஜாகுவார்- லேண்ட்ரோவர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த எஸ்யூவியை வெளியிலிருந்து ரிமோட் கன்ட்ரோலில் இயக்க முடியும். நெருக்கடியான தருணங்களில் இந்த வசதி ஓட்டுனருக்கு மிகுந்த கைகொடுக்கும். கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 ஸ்மார்ட்போன் ஆப்

ஸ்மார்ட்போன் ஆப்

இந்த ரிமோட் கன்ட்ரோல் வசதியை ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் பெறலாம். அதாவது, காரின் ஸ்டீயரிங், பிரேக், ஆக்சிலேட்டர் ஆகியவற்றை டிரைவர் துணையில்லாமல், இந்த ஸ்மார்ட்போன் செயலி கட்டுப்படுத்தும்.

பார்க்கிங்

பார்க்கிங்

சில வேளைகளில் நெருக்கடியாக காரை பார்க்கிங் லாட்டுகளில் நிறுத்த வேண்டியிருக்கிறது. அப்போது, ஓட்டுனர் கதவை திறந்து வெளியேறுவது சிரமமாக இருக்கும். அதுபோன்ற சமயங்களில் இந்த ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனை பயன்படுத்தி, காரை வெளியில் நின்றபடி, பார்க்கிங் செய்ய முடியும்.

ஆஃப்ரோடுக்கும் வரப்பிரசாதம்

ஆஃப்ரோடுக்கும் வரப்பிரசாதம்

ஆஃப்ரோடு சாகசங்கள் அல்லது சாலைகளில் செல்லும்போது கார் சேறு அல்லது அபாயகரமாக சிக்கிக் கொண்டால், காரிலிருந்து வெளியேறி, ரிமோட் கன்ட்ரோல் மூலம் காரை நகர்த்த முடியும். காருக்கு முன்னால், அருகில் இருக்கும் தடைகளை துல்லியமாக பார்த்து காரை நகர்த்த இது உதவும்.

ரேஞ்ச்

ரேஞ்ச்

10 மீட்டர் சுற்றளவுக்குள் நின்று கொண்டு ஸ்மார்ட்போனில் இருக்கும் அப்ளிகேஷனை பயன்படுத்தி காரை இயக்க முடியும். அதற்கு மேல் சென்றால் ரிமோட் கன்ட்ரோல் சிஸ்டம் வேலை செய்யாது.

தானியங்கி கார் திட்டம்

தானியங்கி கார் திட்டம்

தானியங்கி காரை தயாரிக்கும் முன்முயற்சியாக இந்த ரிமோட் கன்ட்ரோல் சிஸ்டத்தை ஜாகுவார்- லேண்ட்ரோவர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

 
English summary
Jaguar Land Rover has showcased a remote controlled Range Rover Sport, that can be controlled using a mobile phone. The app in the smartphone includes controls to steer, accelerate, brake and to shift from high and low range.
Story first published: Wednesday, June 17, 2015, 10:55 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark