ஆய்வுப் பணிகளுக்காக புதிய ஜாகுவார் எக்ஸ்இ சொகுசு கார் இறக்குமதி!!

Written By:

ஜாகுவார் எக்ஸ்இ சொகுசு செடான் கார் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கா இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம், தங்களது சொகுசு செடான் காரான ஜாகுவார் எக்ஸ்இ மாடலை ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தும் பணிகளுக்காக இந்தியாவில் இறக்குமதி செய்துள்ளனர்.

ஜாகுவார் எக்ஸ்இ கார் வருகிற 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட உள்ளது. ஜாகுவார் எக்ஸ்இ கார், இரண்டு விதமான ட்யூனிங் வசதிகள் உடைய, 2.0 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், முதலாவது ட்யூனிங்கில், 160 பிஹெச்பி-யையும், 380 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின், இரண்டாவது ட்யூனிங்கில் 178 பிஹெச்பி-யையும், உச்சபட்சமாக 430 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

சொகுசு செடான்க கார்களின் சந்தையானது இந்தியாவில் தொடர் ஏற்றம் கண்டு வருகிறது. ஜாகுவார் எக்ஸ்இ சொகுசு செடான், இந்தியாவில் அறிமுகம் செய்யபடும் நிலையில், ஆடி ஏ4, பிஎம்டபுள்யூ 3 சீரிஸ் மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ் உள்ளிட்ட கார்களிடம் இருந்து கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டிய தேவையுள்ளது.

ஜாகுவார் எக்ஸ்இ சொகுசு செடானின் பேஸ் (அடிப்படை) மாடல் கார், 30,00,000 ரூபாய் முதல் 35,00,000 ரூபாய் வரையிலான விலையில் கிடைக்க உள்ளது.

English summary
Jaguar Land Rover India has imported the XE luxury sedan to India for research and development purposes. The Jaguar XE will debut at the 2016 Auto Expo in Delhi. The pricing of the XE is expected to be in the range of Rs. 30 lakh - 35 lakh for the base model.
Story first published: Friday, November 6, 2015, 17:37 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos