ஜாகுவார் எக்ஸ்எஃப் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்!

Written By:

ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

ஜாகுவார் எக்ஸ்எஃப் ஏரோ- ஸ்போர்ட் என்ற பெயரில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த புதிய மாடல் ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கும்.

Jaguar Car
 

இந்த காரில் 188 எச்பி பவரையும், 450 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல 2.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 225 கிமீ வேகம் வரை செல்லும்.

இந்த காரின் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் கூடுதல் கவர்ச்சியை தரும் விதத்தில் ஆக்சஸெரீகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த காரில் ரியர் ஸ்பாய்லர், ஸ்போர்ட்டியான முன்புற பம்பர், பிரத்யேக சைடு சில்கார்டு போன்றவை இடம்பெற்றிருக்கிறது.

கருப்பு, வெள்ளை, நீலம், சிவப்பு ஆகிய 4 வண்ணங்களில் கிடைக்கிறது. ரூ.52 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய கார் விற்பனைக்கு வந்திருக்கிறது.

English summary
Jaguar has priced its XF Aero-Sport at INR 52,00,000 ex-showroom, Mumbai, pre-octroi. This model will be offered in a single trim level and will look different from their regular XF model.
Story first published: Saturday, July 4, 2015, 14:22 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark