ஜப்பானில், அமேஸான் தளத்தில் பிஎம்டபிள்யூ ஐ8 கார் விற்பனை... ப்ரீ ஷிப்பிங்!

Written By:

ஜப்பானில், அமேஸான் ஆன்லைன் வியாபார தளத்தில் புதிய பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் விற்பனைக்கு வந்துள்ளது.

மேலும், மொபைல்போன் போல காரை இலவசமாக டெலிவிரி செய்வதாகவும் உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. நம் நாட்டு வாடிக்கையாளர்கள் இந்த காரை வாங்குவதற்கு ஜென்ம பிரத்யேனம் படும் நிலையில், ஜப்பானில் எளிதாக இந்த காரை வாங்குவதற்கான வாய்ப்பு ஜப்பானியர்களுக்கு கிட்டியுள்ளது.

விலை

விலை

ஜப்பானில் 2 கோடி யென் விலையில் அமேஸானில் விற்பனைக்கு கிடைக்கிறது. மேலும், பதிவு உள்ளிட்டவைகளுக்கான ஆவணச் செலவாக 1.61 லட்சம் அமெரிக்க டாலர் கூடுதலாக கொடுக்க வேண்டியிருக்கும். மொத்தமாக 1.68 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புக்கு கிடைக்கிறது.

விலை அதிகம்

விலை அதிகம்

இலவசமாக டெலிவிரி கொடுக்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தாலும், அமெரிக்காவை விட விலையில் 30,000 டாலர் வரை கூடுதலாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், யென் மதிப்புக்கும், டாலர் மதிப்புக்கும் உள்ள வித்தியாசமே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஹைபிரிட் மாடல்

ஹைபிரிட் மாடல்

இந்த காரில் இருக்கும் எலக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 131 எச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வழங்கும். அதேபோன்று, 231 எச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இரண்டும் சேர்த்து 362 எச்பி பவரையும், 570 என்எம் டார்க்கையும் வழங்கும்.

செயல்திறன்

செயல்திறன்

மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 4.4 வினாடிகளில் தொட்டுவிடும். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது.

 நல்ல வாய்ப்பு

நல்ல வாய்ப்பு

பலர் இந்த காரை வாங்குவதற்கு டீலர்களில் முன்பதிவு காத்துக் கிடக்கும் நிலையில், இருந்த இடத்திலிருந்தே எளிதாக முன்பதிவு செய்து வாங்கும் வாய்ப்பை பிஎம்டபிள்யூ ஜப்பானிய பிரிவு வழங்கியிருப்பதை பலரும் வரவேற்றிருக்கின்றனர்.

 
English summary
The BMW i8 is now available online in Japan. It can be bought via Amazon. Also, the ad specifies that you will even get the car shipped for free! Like a mobile phone or something!
Story first published: Saturday, July 18, 2015, 10:11 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark