ஜீப் பிராண்டு எஸ்யூவிகளுக்கு தனி டீலர்ஷிப்புகளை திறக்கும் ஃபியட்!

Written By:

ஜீப் பிராண்டு எஸ்யூவிகளுக்காக தனி டீலர்ஷிப்புகளை திறப்பதற்கு ஃபியட் கிறைஸ்லர் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

அமெரிக்காவின் ஜீப் பிரிமியம் எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஃபியட் கிறைஸ்லர் குழுமம் திட்டமிட்டிருக்கிறது.

Jeep Cherokee
 

2013ம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் ஜீப் எஸ்யூவிகள் சாலை சோதனைகள் நடத்தப்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஸ்திரத்தன்மையற்ற மார்க்கெட் நிலையை கருத்தில்கொண்டு ஜீப் பிராண்டு எஸ்யூவிகள் அறிமுகத்தை ஃபியட் கிறைஸ்லர் குழுமம் ஒத்திப்போட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு ஜீப் பிராண்டு பிரிமியம் எஸ்யூவிகள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது உறுதியாகியுள்ளது.

Jeep Wrangler
 

இதற்காக, இந்தியாவில் 15 புதிய டீலர்ஷிப்புகளை இந்த ஆண்டு இறுதிக்குள் திறப்பதற்கு ஃபியட் கிறைஸ்லர் குழுமம் திட்டமிட்டுள்ளது. முதலாவதாக, ஜீப் செரோக்கீ மற்றும் ரேங்லர் ஆகிய மாடல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன.

இந்த இரு மாடல்களும் முதலில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும். பின்னர், இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

English summary
Now the American manufacturer promises to launch its product within 2015. Prior to that they are planning to setup dealerships across India. These will be exclusive showrooms for Jeep only and their goal is to have 15 dealers by the end of this calendar year.
Story first published: Friday, January 2, 2015, 10:57 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark