'மேட் இன் இந்தியா' லேண்ட்ரோவர் எவோக்.. விலை ரூ.20 லட்சம் குறைந்தது!

Written By:

இந்தியாவிலேயே லேண்ட்ரோவர் எவோக் க்ராஸ்ஓவர் எஸ்யூவியின் உற்பத்தி விரைவில் துவங்கப்பட உள்ளது. இதையடுத்து, எவோக் க்ராஸ்ஓவரின் விலை ரூ.20 லட்சம் வரை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட லேண்ட்ரோவர் எவோக் எஸ்யூவி விற்பனையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த எஸ்யூவி இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் என்று அப்போதே தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சில ஆண்டுகள் கழித்து இந்த எஸ்யூவியின் உற்பத்தி புனேயில் உள்ள ஆலையில் துவங்கப்பட்டிருக்கிறது.

Evoque
 

டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்படும் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் புனே அருகேயுள்ள ஆலையில் தற்போது லேண்ட்ரோவர் ஃப்ரீலேண்டர்- 2, ஜாகுவார் எக்ஸ்எஃப் மற்றும் எக்ஸ்ஜே ஆகிய மாடல்களை அசெம்பிள் செய்து வருகிறது. இந்த வரிசையில், எவோக் எஸ்யூவியின் அசெம்பிளிங் பணிகளும் இந்தியாவில் துவங்கப்பட உள்ளது.

இந்தநிலையில், இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட உள்ள எவோக் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், ரூ.48.73 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ள இந்த க்ராஸ்ஓவருக்கு முன்பதிவும் துவங்கப்பட்டிருக்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட மாடலைவிட இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுவதால் எவோக் விலை ரூ.20 லட்சம் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary

 Tata Motors-owned luxury brand Jaguar Land Rover will manufacture the Range Rover Evoque at its Pune facility to support sales growth in the local market. 
Story first published: Tuesday, March 24, 2015, 12:21 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark