முதல்முறையாக இந்தியாவில் லாஃபெராரி: பிரத்யேக படங்கள், தகவல்கள்!

By Saravana

மும்பையில் நடைபெற இருக்கும் பார்க்ஸ் சூப்பர் கார் ஷோவில் லாஃபெராரி கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. வரும் 10 மற்றும் 11ந் தேதி வார இறுதி நாட்களில் மும்பையில் 7- வது பார்க்ஸ் சூப்பர் கார் கண்காட்சி நடைபெற இருக்கிறது.

இந்த கண்காட்சியில் உலகின் பல முன்னணி சூப்பர் கார்கள் தரிசனம் கொடுக்க இருக்கின்றன. 80க்கும் அதிகமான கார்கள் இந்த ஆண்டு கண்காட்சியில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லம்போர்கினி, ஃபெராரி, அஸ்டன் மார்ட்டின், மஸராட்டி, ரோல்ஸ்ராய்ஸ், போர்ஷே, பென்ட்லீ, பிஎம்டபிள்யூ, ஆடி மற்றும் பென்ஸ் ஆகிய முன்னணி சொகுசு பிராண்டுகளின் கார்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற உள்ளன.


லாஃபெராரி

லாஃபெராரி

அனைத்து கார் பிராண்டுகளும் இந்த ஆண்டு இடம்பெற்றாலும், இவற்றிற்கு எல்லாம் முத்தாய்ப்பாக இந்த கண்காட்சியில் லாஃபெராரி அலங்கரிக்க உள்ளது.

 அறிமுகம்

அறிமுகம்

மும்பையில், நேற்று நடந்த நிகழ்ச்சியில் லாஃபெராரி கார் பார்க்ஸ் சூப்பர் கார் கண்காட்சி அமைப்பாளர்களால் பத்திரிக்கையாளர் முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்டது. கண்காட்சியின் முன்னோட்டமாக இந்த நிகழ்ச்சி நடந்தது.

மதிப்பு

மதிப்பு

இந்தியாவில் வரிகள் இல்லாமல் ரூ.10 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரிகளை சேர்க்கும்போது இந்த காரின் விலை இன்னும் சில கோடிகள் கூடுதலாகும்.

 ஹைபிரிட் கார்

ஹைபிரிட் கார்

ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட இந்த ஸ்போர்ட்ஸ் காரில் 789 பிஎச்பி பவரை வழங்கும் 6.3 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், எலக்ட்ரிக் மோட்டார் 160 பிஎச்பி பவரை அளிக்கும் திறன் கொண்டது.

பிரத்யேக மாடல்

பிரத்யேக மாடல்

கார் சேகரிப்பாளர்கள் மற்றும் ஃபெராரி வாடிக்கையாளர்களை தேர்வு செய்து லாஃபெராரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது லிமிடேட் எடிசன் மாடலாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், லாஃபெராரி இந்தியாவில் தரிசனம் கொடுத்திருப்பது சூப்பர் கார் ரசிகர்கள் மத்தியில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கவுதம் சிங்கானியா

கவுதம் சிங்கானியா

ரேமன்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான கவுதம் சிங்கானியாதான் இந்தியாவின் முதல் சூப்பர் கார் கிளப்பை உருவாக்கியவர். இவர் பிரபல தொழிலதிபர் மட்டுமல்ல. கார் ஆர்வலர். இவர்தான் தற்போது இந்த பார்க்ஸ் சூப்பர் கார் கண்காட்சியையும் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறார். ஃபார்முலா- 1 உள்பட ஏராளமான ஸ்போர்ட்ஸ் மற்றும் சூப்பர் கார்களை ஓட்டுவதிலும் அசகாய சூரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
The highlight of the 2015 Parx Super Car Show will be the exclusive Ferrari LaFerrari hypercar and it will be the first occasion that the Ferrari LaFerrari will be displayed on Indian soil.
Story first published: Thursday, January 8, 2015, 11:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X