லம்போர்கினி அவென்டேடார் சூப்பர்வெலாஸ் கார் அறிமுகம்!

Written By:

ஜெனிவா மோட்டார் ஷோவில் லம்போர்கினி அவென்டேடார் காரின் கூடுதல் சக்தி கொண்ட புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அவென்டேடார் சூப்பர் வெலாஸ் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த கார் இலகு எடை கொண்ட மாடல் என்பதுடன், சாதாரண மாடலைவிட அதி ஆற்றல் வாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

சிறப்பான ஏரோடைனமிக்

சிறப்பான ஏரோடைனமிக்

இந்த கார் சிறப்பான ஏரோடைனமிக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சாதாரண அவேன்டேடார் காரை விட இது சிறப்பான டவுன்ஃபோர்ஸை வழங்கும் என்று லம்போர்கினி தெரிவித்துள்ளது.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 739 எச்பி சக்தியை அளிக்கும் 6.5 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 0- 100 கிமீ வேகத்தை 2.8 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்டது. இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 349.22 கிமீ வேகம் வரை செல்லக்கூடியது.

அதிக சக்தி

அதிக சக்தி

கார்பன் ஃபைபர் பாகங்கள் மூலம் இந்த காரின் எடை 50 கிலோ குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சாதாரண அவென்டேடார் மாடலைவிட 50 எச்பி கூடுதல் சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக மாறியிருக்கிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

முன்புறத்தில் மேட் பிளாக் 20 இஞ்ச் அலாய் வீல்களும், பின்புறத்தில் 21 இஞ்ச் அலாய் வீல்களும் கொடுக்கப்ட்டுள்ளனஸ்ரீ கார்பன் செராமிக் பிரேக்குகள் உள்ளன. புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஸ்போர்ட்ஸ் பக்கெட் இருக்கைகள் போன்றவை இதன் கூடுதல் சிறப்புகள்.

விலை

விலை

3.27 லட்சம் யூரோ விலையில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ.5 கோடி விலையாக கூறப்படுகிறது.

 
English summary
Lamborghini Aventador LP 750-4 Superveloce (SV) has been revealed at the 2015 Geneva Motor Show. The car is lighter, but with more horses under its hood.
Story first published: Tuesday, March 3, 2015, 17:38 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos