லம்போர்கினி ஹுராகேன் காரின் 5-வது மாடலும் வருகிறது!

By Ravichandran

லம்போர்கினி ஹூராகென் கார் 4 விதமான மாடல்களில் விற்பனை செய்யப்படும் நிலையில், 5-வது மாடலும் களமிறக்கப்பட உள்ளது.

லம்போர்கினி நிறுவனம், சொகுசு கார்களுக்காகவும், சூப்பர் கார்களுக்காகவும் மிகவும் புகழ் பெற்றது. இந்த நிறுவனம் சார்பாக அறிமுகம் செய்யபட உள்ள மாடல்களை குறித்த கூடுதல் செய்திகளை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

கல்லார்டோ சூப்பர்காருக்கு மாற்று;

கல்லார்டோ சூப்பர்காருக்கு மாற்று;

லம்போர்கினி நிறுவனத்தின் மிகவும் புகழ்வாய்ந்த மாடலாக கல்லார்டோ சூப்பர்கார் விளங்கியது.

கல்லார்டோ சூப்பர்காருக்கு மாற்றாக, லம்போர்கினி ஹுராகேன் செய்யபடும் போது, கல்லார்டோவின் பெருமைக்கு வலு சேர்க்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு ஹுராகேன் காருக்கு இருந்தது.

ஹுராகேன் ஸ்பைடர், கல்லார்டோ சூப்பர்காரின் கன்வரிடிபிள் வெர்ஷன் ஆகும்.

ஆர்டபுள்யூடி அறிமுகம்;

ஆர்டபுள்யூடி அறிமுகம்;

லம்போர்கினி நிறுவனம், சமீபத்தில் தான் ஆர்டபுள்யூடி எனப்படும் ரியர் வீல் டிரைவ் ஹுராகேன் காரை அறிமுகம் செய்தது.

லம்போர்கினி நிறுவனம், தங்களின் வழக்கமான ஏடபுள்யூடி எனப்படும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தில் இருந்து தடம் மாறி, ஆர்டபுள்யூடி சிஸ்டத்தை ஏற்று கொண்டுள்ளது.

கிடைக்கும் வேரியண்ட்கள்;

கிடைக்கும் வேரியண்ட்கள்;

தற்போதைய நிலையில், ஹுராகேன் மாடலில் 4 வேரியண்ட் கார்கள் விற்கபடுகிறது.

ஹுராகேன் எல்பி610-4, ஹுராகேன் எல்பி610-4 ஸ்பைடர், ஹுராகேன் எல்பி620-2 சூப்பர் ட்ரோஃபியோ மற்றும் ஹுராகேன் எல்பி580-2 உள்ளிட்ட 4 மாடல்களை அறிமுகம் செய்திள்ளது.

ஹுராகேன் எல்பி620-2 சூப்பர் ட்ரோஃபியோ, ரேஸ் ஒன்லி வெர்ஷன் எனப்படும் ரேசிங் செய்வதற்கு மட்டுமே உபயோகிக்க கூடியதாகும். இது சாலைகளில் இயக்குவதற்காக தயாரிக்கபடவில்லை என்பது குறிப்பிடதக்கது.

5-வது வேரியண்ட் அறிமுகம்?

5-வது வேரியண்ட் அறிமுகம்?

ஹுராகேன் கார் வகையில், 5-வது வேரியண்ட் அறிமுகம் செய்யபடும் என தெரிகிறது.

இந்த புதிய வேரியண்ட், ஹுராகேன் மாடல் படிப்படியாக புழகத்தில் இருந்து அகற்றுபடுவதற்கு முன்பாக அறிமுகம் செய்யபடும் என எதிர்பார்க்கபடுகிறது.

ஹுராகேனை அடிப்படையாக கொண்டு அறிமுகம் செய்யபட உள்ள இந்த 5-வது வேரியண்ட், சூப்பர்லெக்கரா அல்லது சூப்பர் வெலோஸ் மாடலாக இருக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

5 முக்கிய அம்சங்கள்;

5 முக்கிய அம்சங்கள்;

லம்போர்கினி நிறுவனம், 5 முக்கிய அம்சங்கள் மீது கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது.

வாழ்க்கை முறை (லைஃப்ஸ்டைல்), செயல்திறன், வாகன இயக்கத்தை இனிமையாக்குதல், ரேசிங் மற்றும் உயர் செயல்திறன் உள்ளிட்ட 5 பண்புகள் மீது அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

புதிய வேரியண்ட்டின் அறிமுக தேதி;

புதிய வேரியண்ட்டின் அறிமுக தேதி;

லம்போர்கினி அதிகாரிகள், ஹுராகேன் காருக்காக, பல்வேறு டிசைன் மற்றும் திட்டங்களை வடிவமைத்து வைத்துள்ளனர்.

லம்போர்கினியின் வருங்கால மாடல்கள், இது வரை எப்போது அறிமுகம் செய்யபடலாம் என எந்த கால நிர்ணயமும் செய்யபடவில்லை.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

லம்போர்கினி ஹூராகென் 2 வீல் டிரைவ் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது

லம்போர்கினி ஹுராகேன் ஸ்பைடர் எல்பி 610-4, விரைவில் இந்தியாவில் அறிமுகம்

அது அர்னாப் கோஸ்வாமியின் லம்போர்கினி கார் இல்லையாம்...!!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

Most Read Articles
English summary
Lamborghini Huracan has plans of introducing 5 New Derivatives. When it was replaced, the Huracan from Lamborghini had huge responsibility of filling in the shoes of the Gallardo supercar. The convertible version of the supercar named Huracan Spyder was launched by the the Italian supercar maker Lamborghini.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X